பக்கம்:திருக்குறள் உரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் பண்பாக இருத்தல் வேண்டும். * 哆 தூது செல்லும் இடத்தில் வெறுப்பன பேசுதலும் Զ-i-65T Լյt II மனப்போக்கும் நிகழலாம். அப்போதும் நிலை தடுமாறாமல் நெறிதவறிப் பேசுவோரிடமும், செய்வோரிடமும் அன்புடையதாகப் பழகி இணக்கம் காணவேண்டும் என்பதால் அண்புடைமை முதலில் கூறினார். வளர்ந்த குடியில் பிறந்திருந்தால் தலைமுறை வழி நற்பண்புகள் அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையிலும் முன்னோர்-பெற்றோர் இருந்த பெருஞ் சிறப்பு வழி காட்டப்பெறும் பெருமை, ஒரோவழி பின்தோன்றியவர்களிடமும் காட்டப்பெறும் என்பதாலும் ஆன்ற குடிய்யிறத்தல்' என்று கூறினாள் யார் ஒருவரும் அவாவிப் பழகும் பண்புகளைப் பெற்றாலே எடுத்த காரியம் முடியும் என்பதால் வேந்தவாம் பண்பு' என்றார். 681. 682 அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று. அன்பும் அறனும் ஆராய்ந்து கண்டு செற்களைச் சொல்லும் வன்மையும் தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று. 'அன்பு'-தூது அனுப்பும் அரசன் மாட்டு என்று கூறுவர். தவறில்லையாயினும் தூதுரைக்கும் அரசனிடத்து அன்பு என்பதே சிறந்த பொருள். 682. 683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. நூல் பல கற்றுத் தெளிந்த அறிவைப் பெறுதல், வேல் தங்கிய வேந்தரிடம் தூது செல்வோருக்குத் தேவையான பண்பு. வேற்றரசனும் அந்த அரசனின் அவை அமைச்சர்களும் தொடுக்கும் வினாக்களுக்கு விடை சொல்லப் பல நூல் பயிற்சி தேவை என்றார். 683. 684, அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. இயற்கையாயமைந்த அறிவும், கவர்ச்சி மிக்க உருவமும், ஆராய்ந்தறிந்த கல்வியும் வளமாகப்பெற்றவர்களேது.ாது செல்லுதல் வேண்டும். 208 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை