பக்கம்:திருக்குறள் உரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தீயினை விட்டு விலகினால் குளிரும்; மிகவும் நெருக்கமாக அணுகினால் சுடும். அரசரை விட்டு அகன்று ஒழுகினாலும் தீங்கு அணுகி நின்றாலும் தீங்கு. அரசரை அணுகி நின்றொழுகுதல், அகன்று நின்றொழுகுதலை விட மிக்க துன்பம் தரும். அரசு அதிகாரம் எதுவும் செய்ய வல்லது. அரசு அதிகாரத்தின் அங்கீகாரமின்றிவாழ்தல் இயலாது என்ற அளவுக்கு அரசு அதிகாரம் குடிமக்கள் மீது ஆதிக்கம் கொண்டுள்ள்து. இஃது மீண்டும் ஒரு புதுவகையான அடிமையை அறிமுகப்படுத்துவதாகும். மார்கழிக் கடுங்குளிருக்கு, தீயின் அருகில் உட்கார்ந்து தீக்காய்வர் பலர். தீக்காய்வாருக்கும் தீக்கும் உள்ள தூரம் நெடிதும் அன்று. அணுக்கமும் அன்று. தீயை மிக அணுகினாலும் சுடும். தீயை விட்டு அகன்றாலும் குளிர் வருத்தும். அதுபோல அரசைமிகநெருக்கமாக அணுகினாலும் அரசின் ஆணை துன்புறுத்தும். அரசின் கவனத்தை விட்டு நெடுந்துரம் விலகினாலும் அரசு ஐயப்பட்டுத் துன்புறுத்தும். அரசு துன்புறுத்தாது ஒழிந்தாலும் பகைவர் துன்புறுத்துவார் என்று உணர்க. 691. 692. மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும் அரசர்கள் விரும்புவனவற்றை விரும்பாதிருப்பின் அரசரால் நிலைத்த ஆக்கம் தரும். மன்னர் விரும்பும் புகழ், பெருமை, அதிகாரம், பெண் ஆகியவற்றை அமைச்சர்கள் விரும்பக் கூடாது என்பது கருத்து. 692. 693. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. போற்றுகின்ற நிலையில் அரியவற்றைப் போற்றுக. போற்றாதொழியும் நிலையில் யாராலும் தேற்ற முடியாது. போற்றிப் பேணவேண்டிய நிலையிலும் தாழ்ந்து போனால் என்ன செய்வது? யாராலும் தேற்ற முடியாது என்பது முடிவு. 693. 694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியார் அகத்து. அரசர் முன்பு இரகசியம் பேசுதலும், நகைத்து விளையாடலும் தவிர்த்திடுதல் வேண்டும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 211