பக்கம்:திருக்குறள் உரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒருவரது எண்ணத்தினைக் குறிப்பால் உணர முடியாது போயின் உறுப்புக்களுள் சிறந்த கண்களின் பயன் என்ன? கண் பேசுதலுக்கும் உணர்த்துதலுக்கும் உரிய கருவி, உய்த்துணர்வார் கிடைத்தால், 705. 706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். பளிங்கு தன்னை அடைந்த பொருளினைக் காட்டும் அதுபோல, நெஞ்சத்தின் கடுப்பினை (கோபத்தை) முகம் காட்டும். பொதுவாக நெஞ்சத்து ஏற்படும் அனைத்து உணர்வுகளையும் காட்டும் திறன் முகத்திற்கு உண்டு. 706. 707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். மக்களுக்கு அவர்தம் முகத்தினும் முதிர்ந்த அறிவுடைய உறுப்பு பிறிதொன்று இருக்கிறதா? தம்மையுடையார் மகிழும்பொழுதுமலர்ச்சியையும், சினம் கொள்ளும் பொழுது கருகிய நிலையினையும் முந்திக் காட்டும். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழி அறிக. ஒருவருடைய அகத்தினை அவருடைய முகத்தினைக் கொண்டே அறியலாம் . - 707. 708. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின். தம்முன் நிற்கும் ஒருவருடைய அகத்தின் எண்ணங்களை அறிய முற்படுவாருக்கு முகம் நோக்கி நிற்றலே போதும். வாயினால் சொல்ல வேண்டுவதில்லை. ஒருவருடைய முகத்தினைக் கொண்டே அகத்தினை உணர்ந்தறியும் ஆற்றலுடையாரின் முகம் நோக்கி நின்றாலே போதும். முகத்தினால் உணரும் திறனுடையார்க்கு, வாயினால் சொல்ல வேண்டியதில்லை. 708. 709. பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். கண்ணினுடைய பார்வை வகைகளை உணர்வாருக்கு, கண்களே ஒருவருடைய பகைமையையும், உறவையும் எடுத்துக் கூறும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 215