பக்கம்:திருக்குறள் உரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் தப்பாமல் விளையும் நிலங்களும் அறவோரும் கேடில்லாத செல்வரும் ஒருங்கே சேர்வது நாடு. எக்காலத்திலும்யாதானும் ஒரு விளைபொருளைப் பிழையின்றித் தரும் நிலம் தள்ளா விளையுள் என்றார். மற்றவர்களைத் தாழ்த்தி வரும் செல்வம் பழிக்கப்படும். சுரண்டப்படுபவர் விழித்துக் கொள்ளும்பொழுது செல்வம் குறையும் என்பதனை விளக்கத் "தாழ்விலாச் செல்வர்” என்றார். செல்வம் ஈட்டலில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் பங்கும் இருக்கிறது. ஈட்டிய செல்வம் பகிர்வில் துலாக்கோல் போல மற்றவர் வாழ்வு தாழாமல் சமநிலையில் இருத்தல் தாழ்விலாச் செல்வத்தின் தன்மை என்றும் பொருள் கொள்ளலாம். "தள்ளாவிளையுள்” என்றதால் பழுதுபடாமல் விளையத்தக்க நல்ல வளமான நிலம் என்றுணர்த்தியது. 731. 732. பெரும்பொருளான் பெட்டக்க தwகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. அளவிறந்த பொருள்கள் விளைவதாகவும் பலராலும் விரும்பப்படுவதாகவும் கேடுகளால் பாதிப்பு ஏற்படாமல் விளைவதாகவும் விளங்குவதே நாடு. விளையுளுக்கு வருங்கேடு; நிலத்தின் தன்மை, பயிர்நிலையில் வருங்கேடு, பூச்சிநோய் போன்றவை அறிவியல் சார்ந்த வேளாண்மைக் கருத்து இது. 732. 733. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி, இறைவற்கு இறைஒருங்கு நேர்வது நாடு. பொறுத்தற்கரிய பொறுப்புக்கள் வந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொண்டு அரசுக்குரிய வரியை ஒருமுகமாகத் தரும் இயல்புடைய குடிமக்களையுடைய நாடே நாடு. “பொறையொருங்கு மேல்வருங்கால்” என்றது தனது குடும்பப் பொறுப்பு மிக்குடையதேயாயினும் அரசுக்குரிய வரியைத் தருவது சிறப்பு என்றுணர்த்தியது. "பொறையொருங்கு மேல்வருங்கால்” என்பதை அரசுக்குரியதாக்கி, அரசுக்குப் பெரும் பொறுப்புக்கள் வரும்போது அவற்றைத் தாங்கமுடியாமல் அரசு நிலை தவறிவிடாமல் அரசுக்குரிய வரியைத் தவறாமல் விருப்பத்துடன் தரும் குடிமக்களையுடைய நாடே நாடு என்றும் கூறலாம். 222 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை