பக்கம்:திருக்குறள் உரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 728. பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். நல்லவர்கள் கூடியுள்ள அவையில் தாம் கற்றவற்றை நல்லவண்ணம் சொல்லத் தெரியாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் யாதொரு பயனுமிலாதவர்களே. மற்றவர்க்கு விளக்கமுற எடுத்துச் சொல்வது, மேலும் தாம் விளக்கமுறவும் பயனுறவுமேயாம். ஆதலால், சொல்லும் ஆற்றல் இல்லாதார் கற்றும் பயனிலர் என்பது கருத்து. 728. 729. கல்லா தவரில் கடைஎன்ப கற்றுஅறிந்தும் நல்லார் அவையஞ்சு வார். பலநூல்களைக் கற்றும் கற்றதன் பயன் தெரிந்திருந்தும் தாம் கற்றதை நல்லவர் அவையில் சொல்ல அஞ்சுபவர்கள் கல்லாதவர்களினும் கடையராகக் கருதப்படுவார்கள். கற்றும் சொல்லத் தெரியாதவர்களால் யாதொரு பயனுமில்லை யாதலால் கல்லாதாரோடொப்பர் என்பது கருத்து. 729. 730. உளர்.எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். அவைக் களத்தைக் கண்டஞ்சித் தான் கற்றவற்றை அவையில் உள்ளோர் மனம்கொள்ளச் சொல்ல இயலாதவர் அவர் வாழும் பொழுதே பயனின்மையின் காரணமாக இறந்தவர் என்று கருதப்படுவாரோடு ஒக்க எண்ணப்படுவர். பயனுடையராக வாழ்தலே வாழ்க்கை என்றகோட்பாட்டை வலியுறுத்த “உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்” என்றார். 730. 74. நாடு மாந்தர்தம் வாழ்வியல் நாட்டில் நடைபெறுவதால் நாட்டின் இயல்புணர்த்தும் அதிகாரம் இது. நாடு என்று எடுத்துக் கொண்டபோதிலும் இயற்கை அமைவுகள் மட்டுமின்றி நாட்டில் வாழும் மக்களின் இயல்தபுகளும் எடுத்துக் கூறப்பெறுகின்றன அரசர் மக்களின் தனித்தனிஇயல்புகள் உணர்த்தியபின் நாட்டின் பொது இயல்புகளை எடுத்துக் கூறுகிறார். 731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 221