பக்கம்:திருக்குறள் உரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் கற்றல், சொல்லுதல், கூட்டுச்சேர்தல் தெளிந்தும் துணிந்தும் செயலாற்றுதல் வாழ்வியலின் இயக்கமுறை. கூறும் திறமில்லையானால் இவ்வியக்கம் தடைப்படும் என்பதறிக. 723. 724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். கற்றறிந்த அறிஞர் அவையில் இருப்போர் ஏற்கத்தக்க வகையில் தாம் கற்றவற்றைச் சொல்லி, அவையின் அறிஞர்களிடமிருந்து தாம் கற்றறிந்ததை விடக் கூடுதலாக அறிந்து கொள்க. அறிருர்களிடையில் நிகழும் விவாதம் அறிவை வளர்க்கும் என்பது கருத்து. 724. 725. ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு. அவையஞ்சாது, தொடுக்கப்படும் வினாக்களுக்கு விடை கூறும் பொருட்டுக் கற்க வேண்டிய அளவுக்குக் கற்க வேண்டும். - உலகம் கற்று வளரும் அளவறிந்து கற்றாலே உலகவர் அவையில் நிற்க இயலும். அதனால், "அளவறிந்து" என்றார். 725. 726. வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. பொருதும் வன்மையைப் பெறாதார் கையில் வாள் இருந்து என்ன பயன்? அவையஞ்சாமல் சொல்லாடல் செய்யும் வலிமையில்லாதோர்.நுண்ணிய நூல்பல கற்பினும் என்ன பயன்? கற்பது சொல்வதற்கே என்ற கருத்து உறுதிப்படுத்தப் படுகிறது. செயலாண்மை உடையார்க்கு வாளொடு பழகுதலும் நூலோடு பழகுதலும் பொருந்தும் என்றாயிற்று. . . 726. 727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். பகைப்புலத்தில் பேடியின் கையில் வாள் போன்றது, சபையில் சொல்லுவதற்கு அஞ்சுபவன் கற்ற நூல், அச்சத்தால் பிடிக்கப்பட்டவர்களுக்கு பகைப்புலத்தில் கையில் வாள் இருந்தும் பயனில்லை. - 727. 220 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை