பக்கம்:திருக்குறள் உரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் முற்றுகை செய்தவர் பிடித்தல் அருமை கருதி ஆசையை விடுதல் - பற்றாற்றுதல். 748. 749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறுஎய்தி மாண்டது அரண். அரண் அகத்தார் வெற்றி கருதிச் செய்யும் முயற்சிகளுக்குத் துணையாய் அமைந்து போர்முனையில் பகைவரைத் தோற்றோடச் செய்து, நிமிர்ந்து புகழுடன் நிற்பது அரண். அகத்தார் செய்யும் முயற்சியும் பகைவர் வீழ்தலும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இந்தக் குறள் அரணுக்குச் சொன்னாலும் தோழமைக்கும் கூட இத்தகைய பண்பு அமைந்திருந்தால் நல்லது. 749. 750. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண். எத்தகைய மாட்சிமையுடைய அரண் இருந்தாலும் செயல்திறன் இல்லாதாரமாட்டு அரண் பயனிலாமல் போகிறது. எந்த வகையான மாட்சிமைக்கும் செயல்மாட்சியே அடிப்படை. 750. 76. பொருள் செயல்வகை உலக இயக்கம் உணவினாலும் மற்ற நுகர்பொருள்களாலும் ஆயது. மானுடம் உண்டு, உடுத்து, நுகர்ந்து வாழ்தலுக்குரிய பொருள்களைப் படைத்தல் பொருள் செய்தலாகும். 751. பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது இல்லை பொருள். பொருள் போலக் கருதிப் பேணத்தக்க தகுதி பல இல்லாதாரையும் பொருள் போலப் பெருமைப்படுத்தி உயர்த்தும் பொருளைவிடச் சிறந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை. தரமான நுகர்வால்வளமும் வலிமையும் நிறைந்த வாழ்வு அமைவதால் "பொருள்'ஆகிவிடுகிறது. 752 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. . தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 227