பக்கம்:திருக்குறள் உரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 'பழைமை காரணமாக நன்றிக் கடப்பாட்டுணர்வுடன் மரணத்தறுவாயிலும் நின்று போரிடுவர் என்பது கருத்து. பலகால் பழகுதல், உறவினைக் கால் கொள்ளச் செய்கிறது. 762. 763. ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். எலிகள் படைபோலத் திரண்டுநாகத்தின் முன் ஒலித்து என்னாவது? நாகம் மூச்சுவிட்டாலே எலிப்படை கெடும். கூட்டம் மட்டும் பயனில்லை. வலிமை தேவை என்பது கருத்து. 763. 764. அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த வன்கண் அதுவே படை அரசனுக்கு, அழிவு வந்தபோது தோற்று ஓடாது பகைவரால் அழிக்கப்படாது, தூய வழிவந்த பேராண்மையை உடையதே படை. "துன்பத்தின் கண்ணும் அழிவின்கண்ணும் துணை நிற்பதே அறம், LDFL. 764 765. கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை. கூற்றுவனே வெகுண்டு மேலெதிர்ந்து வந்தாலும் அஞ்சாமல் கூடி எதிர்நின்று போர் செய்யும் ஆற்றலுடையதே படை. மரணத்திலும் கொடிய துன்பம் ஒன்றும் இல்லை. அதற்கு அஞ்சாது நிற்பதே வீரம் என்பதுணர்த்தியது. 765. 766. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. அசைவிலாவீரமும்மானம் போற்றும் வீரமும், பிணங்கள் மீதும் நடந்து போரிடும் துணிவும், அரசரால் தேற்றப்படுதலும் ஆகிய நான்கும் படைக்கு அரணாகும். வெற்றிகளைப் பெற்றுப்பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதை மானம் என்றார்.போர்க்களத்தில் துண் பத்தில் தல்லப்படுபவர்கள் தங்களைத்தங்களே தேற்றிக் கொள்ளாதவாறு, அரசன் தேற்றவேண்டும். 766. 767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 231