பக்கம்:திருக்குறள் உரை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4T, er å 娜 தருககுறள மானிடவியல் பற்றிய அறிவியல் வழி ஆய்வு செய்தலுக்குரியதேயாம். ஏன்? எல்லாம் மாற்றங்களுக்குரியது என்பது அறிவியல் நியதி. 792. 793. குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்துயாக்க நட்பு. நட்பாகக் கொள்ளக்கருதும் ஒருவனுடைய குணநலன்களையும், பிறந்த குடிமரபையும், குற்றங்களையும், குறைவற விளங்கும் சுற்றத்தினையும் ஆய்வு செய்து நட்பினை மேற்கொள்க. 'குறைவற்ற சுற்றம்' உறவுகளைப் பேணும் இயல்பும் ஒப்புரவு உடையவரின் சுற்றம் எண்ணிக்கையிலும் வளத்திலும் குறைவற்றதாக அமையும். ஆதலின் அவர் நட்பியலுக்குத் தகுதியானவர் என்று உணர்ததியவாறு. 793. 794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. நற்குடியில் பிறந்தவனாகவும் தன்னிடத்து யாதொரு பழிவருதலுக்கும் நாணமுடையவனாகவும் விளங்கும் ஒருவனை, சில பொருள் கொடுத்தேனும் நட்புக் கொள்ளுதல் வேண்டும். குடிப்பிறந்தோராகவும், பழிநாணுவோராகவும் விளங்குபவர் எளிதில் நட்புக்குரியராக மாட்டார் என்பது உண்மை. சில கொடுத்து' என்றதால்நட்புவிலைப்பொருள்என்று கருதுதல்கூடாது என்பதனை உணர்த்த 'குடிப்பிறந்தார் பழிநானுவர்' என்றும் கூறி விட்டார். 794. 795. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். நட்புக்கொண்டாரிடம் நெறிமுறையிகந்த செயல்களைக் கண்டபொழுது அழக்கூடிய அளவுக்கு இடித்துக் கூறி நெறிப்படுத்தும் வழக்கமும் வல்லாண்மையும் உடையார் நட்பைத் தேர்வு செய்து கொள்க. நட்புறவால் அழச்செய்வதற்கும்பகைமையால் அழச்செய்வதற்கும்.உரிய வேற்றுமை அறிக. 795. 796. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். நட்பின் உறுதிப்பாட்டை அளந்தறிதலுக்கு ஒருவருக்கு வரும் கேட்டினைப் போல பிறிதொரு அளவுகோல் இல்லை. வாழும் காலத்தும் அல்லற்படுங் காலத்தும் நிற்பார் நல்ல நண்பன். அல்லற்படும்காலத்து நீங்குபவர் நண்பரல்லர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 239