பக்கம்:திருக்குறள் உரை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நகைத்தலுக்குரிய துர்த்தரின் நட்பினால் வருங்கேடு, பகைவர் தரும் கேட்டை விடப் பலகோடி மடங்கு பெரியது. 817. 818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்ஆடார் சோர விடல். தம்மால் செய்து முடிக்கக் கூடிய கடமையினைச் செய்து முடித்தற்கு இயலாததாகச் சேர்ந்து பணியைக் கைவிட்டு உழல்வாரைக் காணின் அவர்களிடம் யாதொன்றும் கூறாது கை விடுக. செய்யமுடிந்ததைச் செய்யாது விடுபவர் சோம்பேறிகள். சோம்பேறிகளால் என்றும் எதுவும் நடக்காது. கெட்டவர்களை விடச் சோம்பேறிகள் மோசமானவர்கள். ஆதலால் "சோர விடுக” என்றார். 818 819. கனவினும் இன்னாது மண்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபட்டு நிற்பார் உறவு கனவிலும் கூடத் தீயது. கனவிலும் தீயது என்று கூறியதால் நனவில் தீயது என்று உணர்த்தியதாக உணர்க. 819. 820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. வீட்டின்கண் பழகுதலும் பலர் கூடிய மன்றத்தில் பழித்தலும் உடையார் தொடர்பு எந்த அளவிலும் வேண்டாம். கை விடுக. - சிறந்த நட்பும் வெளிப்படும் இடம் மனையல்ல; பலர் கூடும் அவையே என்பது உணர்த்தியது. பழித்தல்மனையிலும் பலரறியப் பாராட்டுதல் மன்றிலும் நிகழ்தல் அறம், சிறப்பு. - 820. 83. கூடா நட்பு தீய நட்புக்கு அடுத்துக் கூடா நட்பு. தீய நட்பு வெளிப்படையாகத் தெரியக் கூடியது. கூடா நட்பு என்பது நட்பு போலக் காட்டிப் பகையும் பழியும் வளர்ப்பது. இத்தகு நட்பில் தொடர்பு கொண்டு ஏமாந்து கெட்டோர் வரலாறு ஏராளம். ஏசுபெருமானைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் கூடா நட்புத்தானே! அகமும், புறமும் ஒத்து வெற்றியிலும் தோல்வியிலும் இன்பத்திலும் துன்பத்திலும் நிற்கும் நட்பே நட்பு. இத்தகு உயரிய நட்பில் கடமையும் உரிமையும் பொருதும். கூடாநட்பு கோடி பெறினும் வேண்டாம். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 245