பக்கம்:திருக்குறள் உரை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் அமைய வழியில்லை. 841. 842. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம். அறிவிலான் நெஞ்ச மகிழ்ச்சியுடன் தருதல் பெறுதல் தவத்தாலேயாம்.வேறொரு காரணமும் இல்லை. 842. 843. அறிவிலார் தாம்தம்மைப் பிழிக்கும் பிழை செறுவார்க்கும் செய்தல் அரிது. நல்லறிவில்லாதவர் தாமே தமக்குச் செய்து கொள்ளும் வருத்தும் துன்பம் பகைவராலும் செய்தல் அரிது. அறிவில்லாதார்க்குப் பகைவர் வேண்டாம்.அவர்களுடைய அறியாமையே போதும் என்றுணர்த்தியது. கள், தவறு முதலியவற்றாலும் பெருந்தீனியாலும் உடல் நலம் இழத்தலை நினைவிற் கொள்க. 843. 844. வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. புல்லறிவுடைமை என்று கூறப்படுவது யாதெனில் அணிவுடையோம் யாம் எனறு செருக்குறுதல் ஆகும். - “அறிவுடையோம்'- என்னும் செருக்கு அறிவு பெறுதலையும், அறிவில் வளர்தலையும் தடுத்து விடும். 844. 845. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற வல்லது உம் ஐயம் தரும். புல்லறிவாளர்கள் தாம் கல்லாத நூல்களைக் கற்றார்போல் காட்டி ஒழுகுதல் கற்றவற்றின் மீதும் ஐயந்தோன்ற ஏதுவாகும். அறியாமையும் தெரியாமையும் குற்றமல்ல. அறிவுடையார் போல் நடப்பதுவே குற்றம். 845. 846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. ஒருவர் உற்ற துன்பத்தை மறைத்தல் அறியாமையின்பாற்படும், அறியாமைக்குக் காரணமாய குற்றங்களை மறைக்காத பொழுது.. மறைக்க வேண்டிய குற்றங்கள் ஆணவம், அடக்கமின்மை. 846. தவ்த்திரு குன்றக்குடி அடிகளார் உரை 251