பக்கம்:திருக்குறள் உரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 89. உட்பகை உட்பகையாவது, புறத்தே வெளிப்படாமல் அகத்தே நின்று உடற்றும் பகை. மற்றும் நம்முடைய பகைவராயிருந்தவர் பின் உடன்பாடு ஏற்பட்டுப் பழகும்பொழுதும் பழைய பகையை மறந்து விடாமல் கரவாக உட்பகையைப் பேணுதலுமாகும். இது அறமன்று. - - நம்முடைய பகைவர்கள் நாம் பெருந்தன்மையுடன் பகையை மறந்து உறவு கொண்டு பழகும் பொழுதும் பகையை மறந்து விடாமல் உட்பகையைப் பேணி வைத்திருத்தலுமாகும். 88. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். இன்பமளிக்கும் நிழலும் நீரும் பின் விளைவாகத் துன்பம் தரும். அதுபோலத் தொடக்கத்தில் இனியவராகத் தழுவும் நண்பர்களும், உறவினர்களும் பின் துன்பம் விளைவிக்கலாம். நிழலும் நீரும் குளிர்ந்தே கேடு செய்தல் போல; முகம் பேசியும் புகழ்ந்து பேசியுமே கெடுப்பர் உட்பகை உடையவர். 881. 882. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. வாள் போல் தோன்றும் பகைவரைக் கண்டு அஞ்ச வேண்டாம். உற்றார் போல் வாழும் பகைவர் தொடர்புக்கு அஞ்சுக. "வாள்போல் பகைவர்’- வெளிப்படையாகத் தோற்றமளிக்கும் பகைவராதலால் இயல்பாகவே உள்ள தற்காப்புணர்வு மிக்குத் தோன்றிப் பாதுகாப்பு தரும். உற்றார்போலக் காட்டிக்கேடு செய்யும் பகைவரின் நயப்புடைய சொல், செயல்களால் மயங்குதல் ஏற்படுமாதலால் இயல்பாக உள்ள தற்காப்புணர்வும் செயற்படாது போய்த் துன்பம் மிகுதியாகும் என்பதால் “கேள் போல் பகைவர் தொடர்'பை விலக்கும்படிக் கூறினார். 882. 883. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்து மட்பகையின் மாணத் தெறும். உட்பகையுடையாரை அஞ்சித் தற்காத்துக் கொள்க. அங்ங்ணம் காத்துக் கொள்ளத் தவறின் நிலைகுலையும். தருணம் வந்துற்றபொழுது மண்பானை அறுக்கும் கத்தி போல் தீமை செய்வர். “மட்பகையின் மாணத் தெறும்” என்றது பச்சை மண்ணை எளிதில் 260 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை