பக்கம்:திருக்குறள் உரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 876. தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். பகைவனை ஆய்ந்தறிந்து தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் அழிவு வரும்பொழுது பகைவனை நட்பாகக் கொள்ளாமலும் அதேபோழ்து ஒதுக்காமலும் விடுக. இதுவே, நடுநிலைக் கொள்கை என்று கூறப்பெறும். அழிவு வரும்பொழுது பகைவனைப் பற்றிய முடிவுகள் எடுத்து உறவு கொள்ளல் அல்லது ஒதுக்குதல் ஆகியன அழிவை உறுதிப்படுத்தும். தவிர்த்திடுக. 873. 877, நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. நொந்து கொள்ளுதல் வேண்டாம். தமது நொந்த நிலையை அறியாதாருக்குக் கூற வேண்டாம். தமது வலிமையின்மையைப் பகைவரிடத்துக் கூறுதல் வேண்டாம். நோதலால் பயனில்லையாதலால், நோவற்க என்றார். 877. 878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. தன்மேம்பாட்டுககுரிய வகையறிந்து தன்னை வளர்த்துக்கொண்டு தற்காத்துகொள்ளும் போழுது பகைவரின் செருக்கழியும். பகைவரின் செருக்கை அடக்கும் முயற்சியைவிடத் தன்னை வளர்த்துக்கொள்ளும் முயற்சியே சிறந்தது என்றாள். 878. 879. இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. களைய வேண்டிய முள் மரத்தை இளமையாயிருக்கும் பொழுதே களைக. அங்ங்ணம் இளமையிலேயே களையத்தவறி முற்றிய நிலையில் அகற்ற முற்படின் கைகளைக் காயப்படுத்தும். 878. 880. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். தம்முடைய பகைவரின் ஆற்றலைச்சிதைக்கும் ஆற்றலிருந்தும் அஞ்சிச் சிதைக்காது இருப்பவர் மூச்சு விடுவதனாலேயே மனிதர், உயிர் வாழ்வோராகக் கருதப் பெறமாட்டார். 880. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 250