பக்கம்:திருக்குறள் உரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் ஒருவன் பகையென்ற பண்பிலதனை நகைச் சுவைக்காகக் கூட விரும்பக்கூடாது. “விளையாட்டு வினையாயிற்று' என்ற பழமொழி உணர்க. பாஞ்சாலியின் நகைப்பில் பாரதப் போரும், விளையாட்டாகக் கவிதை பாடியதில் மாதவியின் பிரிவும் கிட்டியது. 871. 872. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. வில்லினைக் கருவியாக உடையவரிடம் பகை கொளினும் கொள்க சொல்லினைக் கருவியாக உடையவர்களிடம் பகை கொள்ளற்க. வில்லேருழவர் பகை, எல்லை கடந்த தீமையைத் தராது. சொல்லேருழவர் பகை காலங்கடந்தும், எல்லை கடந்தும் தீமை செய்யும், அதனால் சொல்லேருழவர் பகை கொள்ளற்க என்றது. 872. 873, ஏமுற் றவரினும் ஏழை தமியனாய் பல்லார் பகைகொள் பவன். ஒருவன் பலரோடும் பகை கொள்வானாயின் பைத்தியக்காரனை விட அறிவிலியாவான். செய்வதறியாது செய்பவன் பைத்தியக்காரன். அதுபோலக் காரணமின்றிப் பலரோடும் பகை கொள்பவன் பைத்தியக்காரனை விட அறிவிலியாகின்றான். 873. 874. பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. பகையை நட்பாகக் கொண்டொழுகும் பண்புடைய அரசனின் பெருமைக்குள் இந்த உலகம் அடங்கும். ஒரோவழி சந்தர்ப்ப வசத்தால் யாருடனாவது பகை வந்துற்றால் அப்பகையை வளர்த்துக் கொள்ளாமல் நட்புச் செய்து கொண்டு ஒழுகுதல் வேண்டும் என்று உணர்த்தியது. - 874. 875. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. ஒருவன் தனக்குத்துணை இல்லாத நிலையில் பகைவர் இருவராயின், பகைவர் இருவருக்குள் பொருந்தி வரக்கூடிய ஒருவரைப் பகைவரிடமிருந்து பிரித்து இனிய துணையாகக் கொள்க. தமது வலிமை இல்லாமல் விம்புச் சண்டை போடுதல் கூடாது என்பது கருதது. பகைவர் பலவீனமடைவதும் வெற்றிக்குச் சமம் என்றுணர்க. 875. 258 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை