பக்கம்:திருக்குறள் உரை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் பகையை, ஒன்றைக் கொடுத்தாயினும் கொள்க. இழப்பது ஒன்று. அறிவுபூர்வமானது. ஆனால், அடுத்திருந்துசெய்வார் தீமை வழி இழப்பு கணக்கிலவாகும். உடனிருப்பார் போல் காட்டிச் சோதனைக் காலத்தில் உடன் வராமல் ஒதுங்கி நிற்பார் உறவு பயனற்றது. தீமையில் எல்லாம் தீமை வலுவிழக்கச் செய்தல் என்பதறிக. 867. 868. குணன்இலனாய்க் குற்றம் பல.ஆயின் மாற்றார்க்கு இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. ஒருவண் நற்குணங்கள் இல்லாதவனாகவும் குற்றங்கள் பலவுடையவனாகவும் இருப்பின் இவனின் இந்த நிலைமை மாற்றானுக்குத் துணையாக அமையும். நற்குணம் உடையராயின் ஆன்ம வலிவும் சுற்றத்தின் வலிமையும் இருக்கும். * 868. 869. செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா அஞ்சும் பகைவர்ப் பெறின். அறிவிலாது அஞ்சும் பகைவரைப் பெறின் பொருது வெல்வாருக்கு உயர்ந்த இன்பங்கள் கிடைக்கும். அறிவிலாது அஞ்சுபவனிடம் பொருது வெற்றிபெறுதல் அறமாகுமா? 869. 870. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி. நீதி நூல்களைக் கல்லாதவனையும், வெகுளி உடையவனையும் சிறு பொருள்களை விரும்புபவனையும் என்றும் புகழ் மேவாது. ஒருவனைப் பகைத்தலால் வரும் சிறு பொருளை விரும்புவானைப்புகழ் மேவாது. 870. 88. பகைத்திறம் தெரிதல் பகையின் ஆற்றலை அறிதல் அல்லது பகையின் வகையும் துறையும் அறிதல். பகையின் வகையறிதலினால் போர். பகையைத் தவிர்த்தல் ஆகும். 871. பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 257