பக்கம்:திருக்குறள் உரை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆண்மை நலம் பேணாது, காமத்தையே கருதி, பெண்ணை விரும்புவானின் செல்வம் நாணத்தைத் தரும். இயல்பாக மனைவி, வினைமேற்சென்று பொருளீட்டலையும் வழங்கி வசையொழிய வாழ்தலையும் விரும்புவதில்லை. அதனால் செல்வத்தின் பயன் இல்லாமற் போகிறது. அதனால் செல்வம் நானுவதாகக் கூறினார். 902. 903. இல்லான்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். தனது மனைவியிடம் தாழ்ந்து செல்லும் அச்சமுடையோன் எப்போதும் நல்லாரைக் காண்புழிநாணப்படுவான். இத்திருக்குறளில் இயல்பின்மை என்ற சொற்றொடரில், “இன்மை” என்ற சொல் வேண்டுவதன்று. 903. 904. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை விறெய்தல் இன்று. மனைவியைக் கண்டு அஞ்சுபவன் மறுமையின்பத்தை இழப்பதுடன் தாம் செய்யும் செயல்களில் வெற்றி பெறுதலும் அரிது. 904. 905 இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். மனைவிக்கு அஞ்சுபவன் என்றும் நல்லவர்களுக்கு நல்லது செய்ய அஞ்சுவான். தாம் உழைத்து ஈட்டிய பொருளேயாயினும் காமம் மீதுார, மனைவிக்கு அஞ்சுபவன் உரிமையோடுநல்லது செய்யத்துணியாதுஅஞ்சுவான். 905. 906. இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள் அமைஆர் தோள் அஞ்சு பவர். தமது மனைவியின் தோளுக்கு அஞ்சுபவர்கள் தேவரைப் போலக் குறைவிலாத பெருமையுடன்வாழ்ந்தாலும் பெருமை இல்லை. "தோளுக்கு அஞ்சுதல்’-தன் மனைவியின் தோளில் சாய்ந்து நுகரும் இன்பம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் என்றுகொள்வதே சிறப்பு. 'அடிக்குப்பயப்படுதல்' என்ற பொருள் தவறில்லையாயினும் சிறப்பு இல்லை. 906. 907. பெண்ஏவல் செய்துஒழுகும்ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. தன் மனையாள் ஏவும் பணிகளைச் செய்து ஒழுகுவானினும் நாணமுடைய பெண்பிறப்பே பெருமையுடையது. 907. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை -- 265