பக்கம்:திருக்குறள் உரை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் பேணுதற்குரியதல்லாத பெரிய குற்றமாகிய கள்ளை விரும்புவார்க்கு நானம் என்ற நல்லாள் ஒதுங்குவாள். மனிதனொடு நாணம் என்ற நல்ல குணம் ஒட்டிக் கொள்ளப்போராடும். ஆனால் குடிகாரனிடத்தில் தோல்வியை ஒத்துக்கொண்டு ஒதுங்கும். 924. 925. கையறி யாமை உடைத்தே பொருள் கொடுத்து மெய்யறி யாமை கொளல். கைப்பொருளைக் கொடுத்து உண்மை அறியாமையைக் கொள்முதல் செய்வது பழவினையின் காரணமாகச் செய்வதறியாது போனது போலும். தீமையை விலை கொடுத்து எவரும் வாங்கார்; என்ற துணிவில் “பழவினை” என்றார். 925. 926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். உறங்குவாருக்கும் செத்தாருக்கும் இடையே வேறுபாடு இல்லை.அதுபோலக் கள்ளுண்பாருக்கும் நஞ்சுண்பாருக்கும் இடையேயும் எப்போதும் வேற்றுமை இல்லை. சாதல்-பயனற்றுப் போதல், கள்ளுண்பாரும் பயனற்றுப் போதலால் வேற்றுமை இல்லை என்றார். 926. 927. உள்ளொற்றி உள்ளுர் நகப்படுவார் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர். எப்போதும் கள்ளை மறைவாகக் குடிப்பவர் அவரையும் அறியாமல் கண்ணொளி மங்க அறிவு தடுமாறுவதைக் கண்டு உள்ளூரார், “இவன் கள்ளுண்டான்' என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வர். கள்ளுண்ணாக்காலத்து இயல்பு அறிந்தார் உணர்த்த “உள்ளூரார்' என்றார். உடற்சார்பான ஒழுக்கங்களில் மறைவும், மறைத்தலும் பயன்படாது என்பதறிக. 927. 928. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததுஉம் ஆங்கே மிகும்.

  • குடியாத நிலையில் கள் குடித்துக் களித்தறியேன் என்று சொல்லற்க. கள் குடித்தமையை நெஞ்சத்தில் ஒளித்தமையை உடல் காட்டும்.

270 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை