பக்கம்:திருக்குறள் உரை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சூதென்னும் மூதேவியால் கவரப்பட்டவர்கள் வயிற்றுக்குச் சோறும் உண்ணார்; அல்லலிலும் உழலுவர். 936 937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். துதாகும் வழக்கத்திற்கு பழகுதல் பழகிய செல்வத்தினையும் பண்பினையும் கொடுதல். “பழகிய செல்வம்'- என்பதால் வழி வழியாகவும், இளமைக் காலம் தொட்டும் உரிமை பூண்டு உழைத்து ஈட்டிய செல்வம் என்ற கொள்க. 937 938. பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளிஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. சூது, பொருளைக் கெடுக்கும்; பொய்யை மேற்கொள்ளச் செய்யும்; அருளைக் கெடுக்கும்; அல்லலில் உழலச் செய்யும். பொருள் இழத்தல் - வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைக்குப் பொய் கூறலும், பொய் பல சொல்லியும் பொருள் கிடைக்காது போயுழிக் களவு, கொலைப் மேற்கொள்ளுதலால் அருள் கெடுத்து என்றும், களவு, கொலைப் பழக்கத்தால் பெறும் துன்பத்தை அல்லல் என்றும் முறைப்படுத்திக் கூறிய அருமை அறிக. ஒன்றிற்கு ஒன்று காரணமாதல் அறிக. 938. 939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். ஒருவன் சூதினை மேற்கொள்ளின் அவனை உடையும் செல்வமும் உணவும் புகழும் செல்வமும் கல்வியும் என்ற பேறுகள் ஐந்தும் வந்து பொருந்தாது. ஒளி என்பதற்கு உடல்-முகப்பொலிவு என்றும் பொருள் கொள்ளலாம். 939. 940. இழத்தொறுஉம் காதலிக்கும் துதேபோல் துன்பம் உழத்தொறுஉம் காதற்று உயிர். சூதில் பொருளை இழக்கும் தொறும் திரும்ப இழந்த பொருளைப் பெற முடியும் என்று சூதினை விரும்புவதைப் போல, உடம்பு துன்பத்தில் கிடந்து உழன்றாலும் உயிருக்கு உடம்பின் மீது உள்ள பற்று நீங்காது. “திருந்துமாறு அரிது’ என்பது கருத்து. 940. 95. மருந்து உடல் பிணியின்றி இருக்க உதவி செய்வது மருந்து, பிணி, பழவினையாலும் வரலாம். பழவினையால் வந்த பிணிக்கு உடலுக்கு மருந்து: ஆன்மாவிற்கு நோன்பு.இம்மையில் பொருந்தாப்பழக்கங்களாலும் பிணி வரும். இப்பிணிக்கு உணவில் கட்டுப்பாட்டுடன் மருந்தும் தேவை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 273