பக்கம்:திருக்குறள் உரை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் இயற்கையோடிசைந்து வாழ்தலே சிறந்த மருத்துவம் சார்ந்த வாழ்க்கை. மண், நீர், தீ, வளி, கதிரவன் ஆகியன இயற்கை தந்த எனிமையான மருந்துகள். இவற்றைத் தூய்மை கெடாமல் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும். 941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர வளிமுதலா எண்ணிய மூன்று. வாதம், பித்தம், சேத்துமம், ஆகிய மூன்றும் மிகினும் குறையினும் நோய் செய்யும் என்பது நூலோர் முடிவு. "மிகினும் குறையினும்” என்பதில் உழைப்பை செயலைச் சேர்த்துக் கூறல் நன்மரபாகா. அதுவும் உழைப்பு மிகுதியாவதை மறுப்பதுபோல் அமைவது பொருந்தாது. 944 942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். ஒருவன் முன் உண்ட உணவு செரித்த பின் மீண்டும் உண்ணும் பழக்கம் மேற்கொள்ளின் மருந்து வேண்டாம். உண்ட உணவு செரித்தாலே அடுத்த உணவை வாங்கச் சிறுகுடல் ஆயத்தமாக இருக்கும். அதோடு உண்ட உணவு செரித்துச் செங்குருதியானாலே செரிமானம் செய்யும் ஆற்றல் கிடைக்கும். 942. 943. அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. தேவைக்கேற்ப அளவறிந்து உண்க.அங்ங்ணம் அளவறிந்து உண்டால் உடம்பொடு கூடி நெடுநாள் வாழ்தல் இயலும். உடம்பின் இயக்கத்திற்கு உணவு. ஆதலால் உடம்பின் இயக்கநிலைமைக்கு ஏற்ப, ஆற்றல் (கலோரி) தரும் உணவு உண்ண வேண்டும். “அளவு' - என்பது உணவின் அளவல்ல.ஆற்றல் - கலோரியின் களவு கனவின் கணிவைக் குறைத்தால் சிறுகுடல் ஒத்துழைக்காது காற்றுத் தொல்லைகள் ஏற்படும். 943. 944, அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. முன் உண்ட உணவு செரித்தமை அறிந்து உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டு ஒழுகின் உடல் நலத்திற்கு மாறுபாடில்லா உணவை மிகவும் பசித்தபின் உண்க.நல்லபசி, உடல் நலத்துக்குரிய சான்றுகளில் முதன்மையானது. 944. 945. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 274 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை