பக்கம்:திருக்குறள் உரை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 986. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லர் கண்ணும் கொளல். ஒருவருடைய சால்பினை அறிதற்குரிய சோதனை அவர் தமக்கு ஒப்புமை இல்லாதாரிடத்தும் ஏற்பட்ட தோல்வியை ஒத்துக் கொள்ளல். சாதாரணமாகத் தோல்வி, பெரிய இடத்தில் ஏற்படுமாயின் எல்லோரும் ஏற்றுக் கொள்வர். (குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படுதல் என்ற பழமொழியை ஒப்பு நோக்குக) தம்மில் தாழ்ந்தாரிடத்தில் தோல்வியுறின் தோல்வியை ஒப்புக் கொள்ளார். அதாவது, தம்மின் தாழ்ந்தார் பெற்ற வெற்றியைக் கொச்சைப்படுத்துவர். "துலையல்லார்” ஒப்பு நோக்கக் கூடி தகுதி இல்லாதவர். 986. 987, இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. தமக்குத் தீமையே செய்தார்க்கும் இனியவே செய்வதைத் தவிர்த்தால் சால்பினால் ஆய பயன் என்ன? "தீமைக்கு நன்மை' என்ற நியதியே மனித உலகத்தை வாழ்விக்கும். 987. 988. இன்மை ஒருவற்கு இளிவு.அன்று சால்புஎன்னும் திண்மைஉண் டாகப் பெறின். ஒருவனுக்குச் சால்பென்னும் வலிமை உண்டாயின் அவருக்கு வறுமை இழிவன்று. சால்பின் வழிவாழ்வோருக்குச் செல்வத்தினால் யாதொன்றும் ஆகப் போவதில்லை. அதனால் “இன்மை இளிவன்று’ என்று கூறினார். சாண்றாண்மையே நற்பண்புகளின் உறுதிப்பாடுதான். மேலும் சால்புக்குத் திண்மை என்று கூறிச் சால்பினை வலியுறுத்துகின்றார். 988. 989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். சான்றாண்மைக்குக் கடல் என்று சொல்லப்படுபவர்கள் ஊழி மாறினாலும் தாம் சால்பிலிருந்து தவறார். “ ஊழி பெயர்தல்'- துன்பங்களுக்கு ஏதுவான உலக மாற்றம் 'கடல்' எனப்படுதல் - கடலுக்குக் கரை இல்லை. கடல் சாதாரணமாகக் கரையைக் கடப்பதும் இல்லை. அதுபோலக் கட்டுப்பாடுகள் இல்லாமலே சால்பினை மேற்கொள்பவர் என்பது கருத்து. 989. 284 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை