பக்கம்:திருக்குறள் உரை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் சுற்றத்தாருடன் கூடி உண்டு கலந்து மகிழ்தலினும் அறநெறிவழி உதவுதலினும் செல்வத்தின் பயன் கிடைத்து மகிழ்ச்சி கிடைக்கிறது. சுற்றத்தால் சூழப்படுதல் கிடைக்கிறது. இங்ங்ணம் வாழ்ந்தால் செல்வம் இழப்பல்ல. பிறர் கவர்தலில் செல்வம் இழப்புமட்டுமல்லமானமும் போகிறது. 1009. 1010, சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி வறங் கூர்ந்து அணையது உடைதது. சிறப்புடைய செல்வர் வறியவருக்கு எல்லாம் கொடுத்துத் தாம் வறியராதல், மேகம் மக்களுக்கு மழை பொழிந்து வற்றி விடுவது போன்றது. வான்மழை பொழிந்து வையகத்தை வளமாக்கி வறிதாவதுபோல், மேலான செல்வர்வறியோர்க்குதவி, வளம் தந்து வறியவராவர். இத்தகு வறுமை ஏற்றுக் கொள்ளத்தக்கது. 1010. 102. நானுடைமை நன்மைக்கு மாறாகவும் நன்னெறிக்கு ஒவ்வாதனவும் செய்ய நாணுதல். நாணுதல்-வெட்கப்படுதல். 101. கருமத்தால் நாணுதல் நானுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. நன்மக்கள் இழிந்த செயல்களைச் செய்ய நாணப்படுவர். குலமகளின் நாணம் வேறு. மகளிர் நாணம் மனம், மொழி, மெய்யால் மேம்பட்டுக் காண்பது. சான்றோர் நாணம் செயல்களில் வெளிப்படுவது. 1011. 1012. ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறல்ல நாண்உடைமை மாந்தர்க்கு இயல்பு. உணவும் உடையும் இன்னபிறவும் உயிர்களுக்கெல்லாம் வேறுபடா. நாணம் உடைமை மாந்தருக்குச் சிறப்பாகும். 'எச்சம்” என்றது காமம் என்று கொள்ளலாம். 'உடை'- சொல்லியிருப்பதால் மாந்தர் என்று கொள்வதே சரி. பொதுவாகவன்றி, நானுடையவராக இருத்தல் மாந்தருக்குச் சிறப்பு என்று கொள்ளுதல் நல்லது. 1012, 103. ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு. 290 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை