பக்கம்:திருக்குறள் உரை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் முன் 1037ஆம் குறளில் "பிடித்தெருவும் வேண்டாம்' என்ற திருவள்ளுவர், ஏரினும் நன்றாம் எருவிடுதல் என்றது.ஏன்? முன்குறள்புழுதிபட நன்றாக உழ வேண்டும் என்ற நியதியை வலியுறுத்தக் கூறப்பட்டது என்று உணர்க. மேலும், எருவிடாது போனாலும் விளையும் நிலம் வளம் குன்றும் என்பதை அறிக. 1038, 1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். நிலத்திற்குரியவன் நிலத்திற்குச் செல்லாமல் இருப்பானாகில் இல்லத்திற்கு வராத தலைமகனிடம் தலைமகள் ஊடல் செய்வது போல நிலம் ஊடி வளம் தராது. நிலத்தை, கணவன் - மனைவி உரிமை உணர்வுடன் இணைத்துக் கூறிய பாங்கினால் நிலம் உழுவாரிடத்திலேயே இருக்கவேண்டும் என்ற கருத்துப் புலனாகிறது. 1039. 1040. இலம்என்று அசைஇ இருப்பாரைக் கானின் நிலம் என்னும் நல்லாள் நகும். யாதொன்றும் இல்லை என்று சோம்பிக் கிடப்பாரைக் காணின் நிலம் என்று போற்றப்படும் நன்மகள் வெட்கி நானுவாள். நிலத்தில் உழவுத் தொழில் செய்தார் வறியவராதல் இல்லை என்றுணர்த்தியது. இன்று இந்தக் குறள் பொருந்தாது. இயற்கை மாறுபட்டுக் கிடக்கிறது. 1040. 105. நல்குரவு வறுமை. அஃதாவது உண்பன, உடுப்பன இல்லாமை. திருவள்ளுவர் காலத்தில் நுகர்வு எல்லைக்குட்பட்டதேயாம். இன்றோ நுகர்வு எல்லை கடந்து விரிந்துள்ளது. சமுதாயத்தில் ஏழ்மை என்ற புதிய சொல் வழக்கு ஒன்று வழங்கி வருகிறது. உண்பனவும் உடுப்பனவும் இன்மையை ஏழ்மை என்றும் நாகரிக உலகத்தின் சராசரித் தேவைகள்(காலணி, கடிகாரம், ஈருருளை வண்டி, தொலைக்காட்சிப் பெட்டி முதலியன) பெறாத நிலையை வறுமை என்றும் பகுத்துணரலாமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மனிதனைக் கொல்லும் ஏழ்மை, உணவின்மையேயாம். ஆதலால், உணவுக்குக் காரணமாய உழவினை அடுத்து நல்குரவு வைத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 297