பக்கம்:திருக்குறள் உரை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் கூழ் குடிப்பது இழிவல்ல. உழைக்காமல் உண்பதே இழிவு என்ற நெறி உணர்த்தியது. 1065. 1066 ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். பசுவிற்குத் தண்ணீர் என்று இரந்தாலும் நாவிற்கு இரவால் வந்த இழிவு வந்ததேயாம். இரப்பது தண்ணீர். இரக்கப்படுவது பசுவைக் காப்பாற்ற, ஆயினும் இரவினால் இழிவு வருவதில் மாற்றமில்லை. ஆவிற்கும் தண்ணீர் தேடியே தர வேண்டும். அறமும் இரவின் மூலம் செய்தல் நன்றன்று. இன்றைய சமுதாயம் இரத்தலை இரவாகக் கருதவில்லை. 'நன்கொடை'களே நாட்டை இயக்கிக் கொண்டிருக்கின்றன. 1066. 1067, இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. இரந்து வாழ்வோரிடமெல்லாம் யான் இரக்கின்றேன்; இரத்தலைத் தவிர்க்க இயலாத போதும் ஈயாது ஒளித்து வாழ்வோரிடம் இரத்தல் வேண்டாம். இரத்தலே இழிவு. அந்த இரத்தலும் கரப்பாரிடம் நிகழுமாயின் பெருமை மட்டுன்று. எள்ளலும் இழிவும் ஏமாற்றமும் வருதலின் கரப்பாரிடம் இரவண்மின் என்றார். திருவள்ளுவர் இரந்து கேட்பதைத் தவறாது ஈவோமாக 1067. 1068. இரவுஎன்னும் ஏமாப்பில் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும். இரந்து தீர்வு காண்போம் என்ற இறுமாப்பு என்னும் தோணி, இரப்பாருக்கு ஒளித்தல் என்ற பாறை தாக்க உடைந்து போகும். இரத்தல் ஒருபோதும் இறுமாப்புத் தருதல் ஆகா. ஆயினும் இரந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையின்வழி இரத்தலும் ஏமாப்பாகிறது. 1068. 1069. இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள உள்ளது.உம் இன்றிக் கெடும். உடையார்முன் இல்லாதவர் நின்று இரக்கும் செயல் உருக்கத்தைத் தருகிறது. இரக்கப்படுவார் இல்லை என்று கூறியவுடன் உள்ள இல்லாததாகிவிடும். செல்வத்தின் பயன் ஈதல், ஈதல்நிகழாமையால் உள்ளது.உம் இன்றிக் கெடும்' என்றார். 1069, 304 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை