பக்கம்:திருக்குறள் உரை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 110. குறிப்பு அறிதல் 1091. இருநோக்கு இவள்.உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து, 1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. 1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். 1094, யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தாள்நோக்கி மெல்ல நகும். 1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகன் சிறக்கணித்தாள் போல நகும். 1096. உறாஅதவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். 1097 செறாஅச்சிறுசொல்லும் செற்றார்போல்நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. 1098, அசைஇயற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். 1099. ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலர் கண்ணே உள. 1100. கண்ணொடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 309