பக்கம்:திருக்குறள் உரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் ஆயினும் ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்கு உய்தியே இல்லை. தாம் பொது அறம் செய்யாராயினும் ஒருவர் செய்த பொது அறங்களைக் கெடுப்பவருக்கு உய்தியே இல்லை. - 110. 12.நடுவு நிலைமை எல்லார்க்கும் ஒப்ப நடத்தல் நடுவுநிலையாகும். வலிமை யுடையாரிடத்தும், வலிமையில்லாரிடத்தும் ஒரே மாதிரியாக ஒழுகுதல் நடுவுநிலையாகும். நீதி காண்பதில் ஒரஞ்சாராதிருத்தலும் நடுவுநிலையின் 'பாற்பட்டதேயாகும். 11. தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். பகை, உறவு, நட்பு என்னும் பகுதிதோறும் முறை தவறாது ஒழுகுதல் நேர்மையிலும் சிறந்தது. நேர்மையிலும் சார்பின்றி நடுவுநிலையாக நிற்றல் நன்று. 111. 12. செப்டம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. நடுவுநிலைமையுடையவனது செல்வம் அழியாது. அவனுடைய வழியினர்க்கும் பாதுகாப்புத் தரும். எச்சத்திற்கு - அவன் வழித் தோன்றல்களுக்கு என்பது பொதுவான கருதது. ஒருவர் இறந்தபிறகும் அவர் நினைவாக எஞ்சியிருப்பது எச்சம். இங்ங்ணம் எஞ்சிநிற்பது வழித்தோன்றல்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய புகழ் எஞ்சிநிற்கும். ஒருவர் நடுவு நிலையுணர்வுடன் செல்வத்தை ஈட்டினால் அதனால் வரும் புகழ் அவருக்குப் பாதுகாப்பாக அமையும் என்று கொள்ளுதலும் பொருந்தும். 112. 13. நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். நன்மையே தரினும் நடுவுநிலை இழப்பதன் மூலம் வரும் பொருளை அப்போதே கைவிடுக. நடுவுநிலைமை இழந்து பெறும் பொருள் கூடாது என்பது கருத்து. "நன்றே தரினும்” என்றதால் நடுவுநிலை இழந்தபொருள் நன்மை தராது என்பது உணர்த்தியது. 113. 38 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை