பக்கம்:திருக்குறள் உரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் செய்த உதவியின் பெருமை உதவியின் பொருளளவைப் பொறுத்தன்று. உதவியினைப் பெற்றவரின் மேன்மையளவினதேயாம். மிகச்சிறிய உதவியைப் பெரிதெனக் கருதுவது பண்பு என்பது உணர்த்தியது. 105. 106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. துன்பக்காலத்து உதவியாயினார் நட்பை விடாதுகொள்க. மாசற்றர் உறவையும் விடாது கொள்க. மாசற்றார் உறவு, உறவளவிலே உதவும் இயல்பினது என்பதால் இடையீடு இல்லாது பேணுக என்பது கருத்து. 106. 107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கன்ை விழுமம் துடைத்தவர் நட்பு. தனக்குற்ற துன்பத்தினை நீக்கியவருடைய நட்பை, ஏழு பிறப்பிலும் நினைப்பவர் நல்லோர். நெடிய காலம் அல்லது வாழ்நாள் முழுதும் நினைப்பர் என்பது குறிப்பு. 107. 108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ஒருவர்செய்த நன்மையை மறப்பது அறமன்று. அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறமாகும். 108. 109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். தனக்கு முன்பொரு நன்மை செய்தவர், பின் தன்னைக் கொன்றால் ஒத்த தீமை செய்யினும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைத்த அளவிலேயே அவர் செய்யும் துன்பம் மறந்துபோகும். 109. 10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. எத்துணைப்பெரிய அறங்களைக்கெடுத்தவர்க்கும் கழுவாய் உண்டு. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 37