பக்கம்:திருக்குறள் உரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. தான் முன் ஒரு உதவி செய்யாமலிருக்க, மற்றவர் ஒருவர் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலக்குமும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆகாது. முதலிற் செய்த கைம்மாறு கருதியது அல்ல என்பதால் ஈடு ஆகாது. சிலர் செய்யும் உதவி, உதவிபோல நேரிடையாகப் புலப்படாது. ஆயினும் அது பெரிய உதவியேயாம். 101. 102. காலத்தி னால்செய்த நன்றி சிறிது.எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. - ஒருவனது வாழ்க்கையில் உதவி தேவைப்படும் காலத்தில் செய்த உதவி சிறிதாயினும் அக்காலநிலை நோக்க நில உலகத்தினும் பெரியதாம். காலத்தினால் செய்த உதவி - உதவி தேவைப்படும் காலத்தில் செய்தல் அல்லது செய்யப்பெறும் உதவியால் பயன் மிகுதியும் அடையக்கூடிய காலத்தில் என்றும் கூறலாம். அதாவது, இளமையில் கற்பித்தல், மணப்பருவத்தில் மணம் செய்துவைத்தல், வறுமை வந்தடைவதற்கு முன்பே பொருள் செய்யத் துணை செய்தல் என்பன போலவாம். 102. 103. பயன்துக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலிற் பெரிது. நாம் இதைச் செய்தால் அவர் நமக்கு இன்னதைச் செய்வார் என்று எண்ணாமல் செய்த உதவியின் அருமையினை ஆராய்ந்து நோக்கின் அதன் நன்மை கடலினும் பெரியதாம். 103. 104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். தனக்கு ஒருவன் தினை அளவு உதவி செய்யினும் அதனை பனையளவாகக் கருதி கைக்கொள்வர், அதன் பயனை உணர்ந்தவர்கள். ஒரு காலத்தில் ஒருவர் செய்த உதவி பொருளளவில் சிறியதாக இருப்பினும் அவ்வுதவியின் பயன் வளர்ந்து பெரும்பயனைத் தருதல் இயற்கை. இளமையில், கற்பிக்கும் ஆசிரியனே பின் வளரும் கல்விக்கு அடித்தளம் அமைக்கின்றான். வளர்ந்துவரும் தொழிலுக்குரிய மூலதனம் சிறியதாகவே அமையும்.104. 105. உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 36 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை