பக்கம்:திருக்குறள் உரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் இந்நிலவுலகில் எல்லா நன்மைகளும் பெறுதற்குரியர் யார்? எவர்? எனின், பிறன் மனைவியை விரும்பி அவள் தோளைத் தழுவாதவரே யாம். 149. 150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. ஒருவன் அறநெறிகளை மேற்கொள்ளாது தீவினைகள் பலவற்றைச் செய்து ஒழுகினும், பிறன் மனைவியை விரும்பி ஒழுகாதிருத்தல் நல்லது. அதாவது, பிறன்மனை நயந்து ஒழுகாமை, பிற தீவினைகளின் தாக்குதலைத் தவிர்க்கும் என்பது கருத்து. "செயினும்', செய்யற்க என்ற குறிப்புடையது. 150. 16. பொறையுடைமை தனக்குப் பிறர் செய்த எல்லாப் பிழைகளையும் மறத்தலும், பொறுத்தாற்றிக் கொள்ளுதலும், பிழை செய்தார்க்கும் ஒல்லும் வகையால் நன்மை செய்தலும் ஆகியனவற்றை உணர்த்துவது இந்த அதிகாரம். ஒழுக்கமுடைமையின்கண் வஞ்சினம் கொள்ளாமையும் சாரும். ஒருவர் ஒழுக்கமுடையார் என்பதை உறுதிப்படுத்துவது பொறையுடைமைப் பண்பேயாகும். 151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னை அகழ்ந்து புண்படுத்துவோரை வீழ்த்தாமல் வளர்த்துத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்ந்து பேசுவோரைப் பொறுத்தல் தலையாய .0اIJ|لئے நிலம் கொத்தி, வெட்டி செய்யும் துன்ப வாயில்களையே தனது தர உயர்வுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. அந்நிலத்தின் வளத்தைக் கண்டு, கொத்தி-வெட்டியவன் நிலத்திற்கு உரிமை கொண்டாடுவான். அதுபோலவே ஒருவனின் தாழ்ந்த நிலை கண்டு இகழ்ச்சி செய்பவர் அவன் வளர்ந்த பிறகு உறவு கொண்டாடுவர் என்பது கருத்து. அறம் நன்மையே செய்வது. ஒருபோதும் தீமை செய்யாது. தம்மை இகழ்ந்து செய்யும் செயல்களைத் தாங்கி, அந்த இகழ்வுகளின் வாயிலாகவே நல்லறிவு பெற்று உழைப்பவர் வளர்வர்; வாழ்வர். 151. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 47