பக்கம்:திருக்குறள் உரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் நம்பிய இடத்தில் தீச்செயல் செய்வோரின் செயல் அறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர் கொல்வர் என்ற உறுதியால் செத்தார் என்றார். 143. 144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். எத்துணைப்பெரியோராக இருந்து என்ன, தாம் செய்யும் தீமையைத் தினையளவும் எண்ணிப் பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்துக்குள் புகுதல்? இத்தகையோருக்குப் பெருமை என்ன பயனைத் தரும்? 144. 145. எளிதுஎன இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. எளிதாக அமைந்ததெனப் பிறர் மனைவியின்கண் தீச்செயல் செய்தொழுகுபவன் என்றும் மறையாத பழியை அடைவான். 145. 146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். பிறண்மனைவியின்கண் நெறிகடந்து ஒழுகுபவரிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்கா. - 146. 147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன். . அறநெறியில் இல்வாழ்வான் என்பவன், பிறன் மனைவியை விரும்பி ஒழுகாதவன். பிறன் மனைவியை விரும்பாத நிலையிலேயே இல்லறம் சிறப்புறுகிறது. 147. 148. பிறண்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. பிறன் மனைவியை விரும்பி ஒழுகாத ஒழுக்கம், நிறைந்த பேராண்மையுடைய சான்றோர்க்கு அறம். அறம் மட்டுமன்று; ஒழுக்கமும் கூட. 148. 149. நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 46 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை