பக்கம்:திருக்குறள் உரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இல்லாத தன்மையை ஒழுக்க நெறியாகக் கொள்க. s தீமை செய்யாமை மட்டும் ஒழுக்கமன்று. பிறர் நலம் கண்டு பொறாது எண்ணுதல் படிமுறையில் வளர்ந்து தீமை செய்யக் காரணமாக அமையும் என்பதறிக. 161. 162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும் அழுக்காற்றின் அண்மை பெறின். யாரிடத்தும் பொறாமை என்னும் அழுக்காறில்லாது ஒழுகும் இயல்பை ஒருவன் பெறுவானாயின், மற்று அவன் பெறக்கூடிய பேறுகள் எதுவும் சிறந்ததில்லை. இதைப்போன்று. பிறர்நலன் காணும்பொழுது அழுக்காறிண்மையால் மற்றவர் பகை இல்லை. அறநெறியும் பிறழவில்லை. மற்றவர்நலம் கண்டபொழுது அழுக்காறு கொள்ளாதிருப்பதால் அதே நிலைகளைப் பெறும் ஆர்வமும் முயற்சியும் 162. தோன்றும் என்பது உண்மை. 163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம் பேணாது அழுக்கறுப் பாண். இம்மைக்கும் மறுமைக்கும் அறமும் செல்வமும் வேண்டாம் என்று சொல்பவன் பிறன் செல்வம் கண்டபொழுது மகிழாது பொறாமைப்படுபவன். மற்றவன் பெற்ற செல்வத்தைக் கண்டபொழுது அதற்காக மகிழ்ந்து, செல்வத்தைப் பெற்றவன் அச்செல்வத்தை இழந்து விடாமல் தம்மாலியன்ற பாதுகாப்பும் செய்தலே சிறந்த ஒழுகலாறு. அங்ங்ணம் செய்யாதவர்கள் அழுக்காறுடையயவர்களேயாம். அழுக்காறு அறநெறியில் செலுத்தாது என்பதால் 'அறனாக்கம் வேண்டாதார்" என்றார். 163. $64. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. 录 அறிவுடையோர் பொறாமை கொண்டு அறனல்லாதனவற்றைச் ೧ಕ್ಕುಬm, அங்ங்னம் அறமல்லாதன செய்வதால் இருமையிலும் கேடு வருவது அறிந்து. . . . . . . தீமை செய்தலாவது, ஒருவர் கல்வி, செல்வம், ஆற்றல், அதிகாரம் ஆகியவைகளைப் பெற்று விளங்கினால் அவ்வாக்கத்திற்கும் 50 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை