பக்கம்:திருக்குறள் உரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் பசித்துன்பம் மனிதனைக் கள்வனாக்குகிறது. பொருள் இழப்பு ஏற்படுத்துகிறது. ஈத்துவத்தல் என்பதும் பழக்கத்தினால் அமைவது. முதலில் ஈகை எளிதன்று. தொடங்கிய பின் இன்பமேயாம். 228. 229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். பொருள் நிறைய உடையவர் வறியவர்க்கு இட்டு உண்ணாது தாமே தமியராக உணர்னல் இரத்தலினும் பொல்லாதது. பொருள் நிறைய சேர்க்கவேண்டும் என்ற எண்னத்தில் தனியே உண்ணல் என்றும் கூறுவர். ஏற்புடையதே. 229. 230. சாதலின் இன்னாதது இல்லை இனிது.அது உம் ஈதல் இயையாக் கடை. ஒருவனுக்குச் சாவை விடக் கொடியது பிறிதொன்று இல்லை; ஆயினும் ஈகையாளனுக்கு அந்தச் சாவும் ஈதல் இயலாவிடத்து இன்பந் தருவதாம். 230, 24. புகழ் புகலப்படுவது புகழ். ஒருவருடைய வாழ்க்கையின் சாதனையால் பலர் வாழும்பொழுதுஅந்தப் பலர் உளமாரக்கூறும் சொற்கள் புகழாகும். புகழ் வேறு; விளம்பரம் வேறு. இன்று, விளம்பரமே நிலவுகிறது. புகழுடையார் யாருளர்? 231, ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 隧 வறியார்க்கு வழங்கல்; புகழ் பெற வாழ்தல் அப்புகழன்றி உயிர்க்குலம் பெறக்கூடிய பேறு வேறு இல்லை. - பொருள் பற்று நெகிழ்ந்துவிடாத ஒன்று, அதனால் வறியார்க்கு ஒன்று வழங்கும் இயல்பு எளிதில் வராது. 莎 பொதுவாகப் பொருளுடையோர் செய்யாத ஈதலைச் செய்தலால் புகழ் வரும் என்பது கருத்து. ஆனாலும், ஈதலால் மட்டும் புகழ் வருவதன்று என்பதறிக. - 234. 232. உரைப்பர் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 68 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை