பக்கம்:திருக்குறள் உரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது உணர்வார்ப் பெறின். புலால் ஆவது பிறிதோர் உடம்பின் தசை? தூய்மையற்ற புண் போன்றது என்று உணர்வார், ஊனை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.257, 258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். மயக்கமற்ற தெளிந்த அறிவுடையார் உயிர் நீங்கிய ஊனை உண்ணமாட்டார். 258. 259. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. தீயின்கண் நெய் முதலியவற்றை அவியாகச் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்வதினும் சிறந்தது, ஒன்றின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை, வேள்வியினும் சிறந்தது கொல்லாமை. வேள்வி முதலியவற்றின் காரணமாகக் கொலை நிகழ்ந்தமையை மறுத்தது இது. 259. 260. கொல்லான் புலாலை மறுத்தாைைனக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். ஓர் உயிரையும் கொல்லாதவனாக புலால் உண்ணாதவனாக இருப்பானை, எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும். 260. 27. தவம் உயிர், அண்பொழுக்கத்தில் நிறைந்ததாகவும், செந்தண்மை யுடையதாகவும் வளர்தலுக்குரிய முயற்சியில் ஈடுபடுதல் தவம். விருப்பங்கள் நிறைவேறாவழி வெறுப்புத் தோன்றும். வெறுப்பு பகையை உருவாக்கும். விருப்பு-வெறுப்புகளில் சமநிலை உணர்வுடன் துன்பம், இன்பம் காரணமாக மாறுபடாது அன்பில் நிற்றல் தவம். 26. உற்றநோய் நோண்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 75