பக்கம்:திருக்குறள் உரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்புப் பெட்டகத்தில் பொன்னை, மணியை, வைரத்தை, வைடூரியத்தைப் பூட்டி வைக்கின்ற உலகம், இதயப் பெட்டகத்தில் அண்பை, நட்பை, சகதுணையின் குறைநிறைகளைப் பூட்டி வைப்பதில்லை. அப்படிச் சக உயிரின் குறைநிறைகளைப் பாதுகாக்கின்ற நம்பிக்கையில்தான் இல்லறத்தின் அடித்தளம் ஆழங்கால்பட்டு நிற்க முடியும். இத்தகு அறம் சார்ந்த இல்லற வாழ்வில் எந்தச் சோதனைகளுக்கும் சோர்வுபடாது வாழ்தல் என்ற விளக்கம் எவ்வளவு அருமையுடையது! பானைச் சோற்றுக்குப் பதம் ஒரு சோறு போல இந்த ஒரு குறளின் விளக்கத்திலேயே இந்த முழு உரையின் அருமையை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

அறம் சார்ந்த இல்லற வாழ்வைத் தெளிவாக வரையறுத்து விளக்கிய பெருமான், இன்பத்துப்பாலைப் புறம் தள்ளி இருப்பாரா? இன்பத்துப்பால் உரை கிடைக்காததற்குக் காலம் நம் கைநழுவிப் போய் விட்டதுதான் காரணம். இறையருளில் நம் மகாசந்நிதானம் இரண்டறக் கலந்து விட்டதால் இன்பத்துப்பால் விளக்கம் இலக்கிய உலகத்திற்கு இல்லாமல் போய் விட்டது பெருங்குறையே! அன்பர்களுக்குத் திருக்குறள் முழுமையும் கிடைக்க வேண்டும் என்பதைக் கருதி இன்பத்துப்பால் மூலம் இணைத்து வெளியிடப் பெறுகிறது.

மகாசந்நிதானம் என்ற திருக்குறளின் எளிய இனிய உரையாய் விளங்கும் நம் ஆதீனப்புலவர் மரு. பரமகுரு அவர்கள் வழக்கம் போல் இப்பணியிலும் கடுமையாய் உழைத்திருக்கின்றார். நம் அருள்நெறிப் பதிப்பக வெளியீடாய் வரும் இத்திருக்குறள் உரைப்பதிப்புப் பணியில் தம்மை முழுமையாய் ஒப்படைத்திட்ட நம் மகாசந்நிதானத்தின் வளர்ப்புச் செல்வமாகிய இளவல் கிருங்கை சேதுபதி, அவர்தம் அருமை இளவல் அருணன் ஆகியோருக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

என்றும் குருமகாசந்நிதானத்தின் பணியின் வழியில்

கரைந்தும், கலந்தும் உங்களோடு

குன்றக்குடி.

என்றும் வேண்டும் இன்ப
அன்புடன்
01.08.2005
பொன்னம்பல அடிகளார்