பக்கம்:திருக்குறள் உரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 288 அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. தம் நிலையறிந்து வாழ்ந்தார் நெஞ்சத்து அறம் நிற்றல் போல், களவறிந்தார் நெஞ்சத்தில் கரவு நிற்கும். அளவறிந்தார் நெஞ்சத்து அறம் நிற்றலால் அவர்தம் சிந்தனை, செயல் அனைத்தும் அறமாய் அமையும். களவறிந்தார் நெஞ்சத்துக் களவே நிற்பதால் இவர்தம் சிந்தனை, செயல் அனைத்தும் வஞ்சனையாகவே அமையும். 288. 289. அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். களவு தவிர மற்றைய நேர்வழியாதொன்றும் அறியாதவர் களவில் பலகாலும் பயின்று அவ்வழி ஊக்கங்கள் மிகுதியும் பெற்று அளவற்ற களவுகளைச் செய்து வீழ்வர். ஒருகால் களவு வாழ்க்கை வாழ்ந்தாலும் பிறிதொருகால் சிந்திக்கும் இயல்பு இருப்பின் தேறுவர் என்பது பொது நியதி. இதுவும் அற்றவராதலால் "மற்றைய தேற்றாதவர்” என்றார். அளவிறந்த களவைச் செய்யும் நிலையே வீழ்ச்சிக்குக் காரணமாகும் என்பது கருத்து. 289. 290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. களவு நிலையில் வாழ்வார்க்கு உடம்பு உயிரைத் தம்மிடத்தில் வைத்துக் கொள்ளாது புறத்தே தள்ளும். களவு நிலையைத் தவிர்த்து வாழ்ந்தவர்களைப் புத்தேள் உலகும் தள்ளாது ஏற்கும். களவு செய்து வாழ்வார்பயத்துடன் வாழ்வதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மரணம் எளிதில் வரும். களவுநிலையில் வாழ்வார் உழைப்பின்றி வாழ்தலின் நோய் முதலியன வந்தும் உடல் கெடுதலால் உயிர் பிரியும். 290. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 83