பக்கம்:திருக்குறள் உரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 293. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஒருவன் தன் நெஞ்சு அறிந்ததொன்றைப் பிறர் அறியவில்லையென்று கருதிப் பொய் சொல்லாதொழிக. பொய் சொன்னா னாயின் அவன்தன் நெஞ்சே உறுத்தும்; சுடும். யாருக்கும் நல்லவராக இல்லாது போனாலும் பொறுத்துக் கொள்ளலாம். அவரவர் தம் நெஞ்சுக்காவது நல்லவராக இல்லாது போனால் என்ன செய்ய இயலும்? ஒருவர் தம் நெஞ்சே அவருடைய சார்பின் காரணமாக முற்றாக நிறைநலம் பெற்றதாக இருக்காது. அதுவே கூட ஒரோவழி அறிந்து தெருட்டும் போது உடன்பட்டு வாழாமை விலங்கியல் வாழ்க்கை. 'தன்நெஞ்சே தன்னைச்சுடும்'என்றது நெஞ்சம் முரண்பட்டமையின் காரணமாக உடலுறுப்புகள் வாயிலாகவும் விரைந்து சொற்கள் வராமையினாலும் குற்றமுடைமையைப் புலப்படுத்தி விடும். 293. 294. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகின் அவன் உயர்ந்தோர் உள்ளத்தில் எல்லாம் உளண். உயர்ந்தோர் உள்ளத்தில் இடம் பெற ஆரவாரங்கள், விளம்பரங்கள் தேவையில்லை. உள்ளத்தால் ஒழுகினாலே போதும். 294, 295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை. ஒருவன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின் அவன் தவமும் தானமும் செய்தவரினும் சிறந்தவனாவான். கடுந்தவமும் தானமும் பொய்ம்மையாலும் களவாடிய பொருளாலும் பேணப்படுவதுண்டு. ஆதலால் வாய்மை தழுவிய வாழ்க்கை வாழ்ந்தாலே போதும். தவம் இன்றியமையாததல்ல; களவாடிய பொருளால் தானம் செய்வதை விட அறிவறிந்த ஆள்வினையுடன் வாய்மை தழுவிய வாழ்க்கை வாழ்ந்தாலே போதும் என்பது கருத்து. தவமும் தானமும் வேண்டாம் என்பதல்ல; இவையிருந்தும் வாய்மையில்லாது போனால் பயனில்லை. வாய்மை இருந்து இவையிரண்டும் இல்லையானால் குற்றமில்லை. 295. 296. பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 85