பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் அதிகாரம் 3

செயற்கு அரிய செய்வார் பெரியம்; சிறியர் செயற்கு அரிய செய்கலாதார். 26 சிறப்பான செயலைச் செய்வார் பெரியோர், சிறியோரால் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய முடியாது.

சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்று ஐந்தின் வகை தெரிவான்கட்டே-உலகு. 27 ஐந்து ஆசைகளின் உண்மைகளை அறிந்து, அவற்றை வசப்படுத்துகிறவனுடைய அறிவை உலகம் போற்றும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும். 25 மகான்களின் பெருமையை, அவர்கள் கூறிய

அறிவுரைகளே நன்றாகத் தெரிவித்து விடும்.

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணம் ஏயும், காத்தல் அரிது. 29 நல்ல பண்புடையவரான, மலைபோன்ற பெரியோரின் கோபம் சிறிது நேரம் நின்றாலும், அதைத் தடுத்து நிறுத்த முடியாது.

அந்தணர் என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும் செந் தண்மை பூண்டு ஒழுகலான். 30 எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் அறவோரே மேன்மையானவர் (அந்தணர்) என்று கூறப்படுவர். -

13