பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம்

4. அறன் வலியுறுத்தல்

(நன்மையை உறுதிப்படுத்துவது) சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ, உயிர்க்கு? 31 நன்மையான செயல் பெருமையையும், செல்வத்தையும் தரும். ஆகையால், நன்மையைக் காட்டிலும், மனிதனுக்கு உயர்வானது வேறு எதுவும் இல்லை.

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு. 32 தருமத்தைக் காட்டிலும், நன்மையானது எதுவும் இல்லை. அதை மறப்பதைவிடத் தீமையானதும் வேறு இல்லை.

ஒல்லும் வகையான், அறவினை, ஒவாதே,

செல்லும்வாய் எல்லாம் செயல். 33 முடிந்த வரையில், சந்தர்ப்பம் ஏற்படும்பொழுது எல்லாம், நன்மைகளை விடாமல் செய்ய வேண்டும்.

மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்; ஆகுல நீர, பிற. 34 மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் என்பது மனத் தூய்மை இல்லாதவை எல்லாம் வெளிப் பகட்டு.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும் இழுக்கா இயன்றது-அறம். 35 பொறாமை, பேராசை, கோபம், கடும்சொல் ஆகிய நான்கையும் நீக்கிவிட்டுச் செய்கின்ற காரியங்கள் அறம் ஆகும்.

14