பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் அதிகாரம் 4

‘அன்று அறிவாம்’ என்னாது, அறம் செய்க மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36 பிறகு செய்யலாம் என்று எண்ணாமல், உடனே நன்மைகளைச் செய்துவிட வேண்டும் அதுவே, இறக்கும் பொழுது துணையாக நிற்கும். ‘அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை பொறுத்தானொடு ஊர்ந்தானிடை 37 பல்லக்கைத் தாங்குபவனுக்கும், அதில் இருப் பவனுக்கும் இடையே, தருமத்தின் பயன் இதுவே என்று தெரிந்து கொள்ளலாம் (நன்மையான செயலைச் செய்தவன் பல்லக்கில் இருக்கிறான். நன்மை செய்யாதவன் அதைத் தூக்குகிறான் என்பது, தொழில் தெரிந்த காரணத்தால் அவன்'துக்குகிறான் என்றும் கருதலாம்).

வீழ் நாள் படாஅமைநன்று ஆற்றின், அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல். 38 ஒருவன் எந்த நாளும் உதவிகளைச் செய்து கொண்டே இருந்தால், அவனுடைய வாழ்க்கையில் துன்பம் நேரிடாது.

அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம் புறத்த, புகழும் இல. 39 தருமத்தால் வரும் மகிழ்ச்சிதான் இன்பம், பிற எல்லாம் இன்பம் ஆகா, புகழும் இல்லை. செயற்பாலது ஒரும் அறனே; ஒருவற்கு உயற்பாலது ஒரும் பழி. 40 தன் வாழ்நாளில் ஒருவன் செய்ய வேண்டியது தருமமே. செய்யாமல் விட்டு விட வேண்டியது பழி, குற்றச் செயல்.

15