பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்


74. நாடு

(நாட்டின் சிறப்பு) தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்வு இலாச் செல்வரும், சேர்வது-நாடு. 731 விளை பொருள்களைச் செழிப்பாகத் தரக்கூடிய நிலங்களும், அதில் பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளும், நியாயமான வழிகளில் பொருள் சம்பாதித்த செல்வந்து களும் ஒருங்கே அமைந்து சிறப்பு அடைவதே நல்ல நாடு. பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி, அருங் கேட்டால், ஆற்ற விளைவது-நாடு 732 பலவகையான பண்டங்களும் உற்பத்தி ஆகக்கூடிய இடம் என்று பிற நாட்டினரும் விரும்பி வரக்கூடியதாயும், அழிவு இல்லாமல், மிகுதியாக விளையக்கூடிய நிலங்களும் உடையதே சிறந்த நாடு. பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி, இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது-நாடு. 733 மற்ற நாட்டு மக்கள் வந்து குடியேறுவதால், ஏற்படுகின்ற துன்பத்தையும், பொறுப்பையும் தாங்கி, அரசனுக்கு வரி முழுவதையும் முறையாக செலுத்தக் கூடிய குடிமக்களைக் கொண்டதே நல்ல நாடு. உறு பசியும், ஒவாப் பிணியும், செறு பகையும், சேராது இயல்வது-நாடு. 734 மிகுதியான பசியும், நீங்காத நோயும், அழிவு செய்யும் பகைவரின் தொல்லையும் வந்து சேராமல், நல்ல நிலையில் இருப்பதே நாடு. பல்குழுவும்,பாழ்செய்யும் உட்பகையும்,வேந்து அலைக்கும் கொல் குறும்பும், இல்லது-நாடு. 735 குடிமக்களுக்குள் பல கட்சிகளும், நாட்டைப் பாழாக்கக் கூடிய உள்நாட்டுத் துரோகிகளும், சமயம் நேரும்பொழுது அரசனைக் கொலை செய்யக்கூடிய சிற்றரசர்களும் இல்லாததே நாடு,

154