பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் அதிகாரம் 74

கேடு அறியா, கெட்ட இடத்தும் வளம் குன்றா நாடு, என்ப, நாட்டின் தலை. 236 பகைவரால் செய்யப்படாததாய், அப்படி ஒரு சமயம் கேடு நேர்ந்துவிட்ட போதிலும், பயிர் வளம், செல்வ வளம் குறையாததாய் உள்ள நாடுதான் எல்லா நாடுகளையும் விட முதன்மையானது என்ற சொல்லுவார்கள். இரு புனலும், வாய்ந்த மலையும், வரு புனலும், வல் அரனும்,_நாட்டிற்கு உறுப்பு. 737 மழை நீர், ஊற்று நீர் ஆகிய இருவகை நீர்வளமும், சகல வாய்ப்புகளும் வாய்ந்த மலையும் அதிலிருந்து அருவியாக ஓடிவருகின்ற நீர்வளமும் உறுதியான கோட்டையும் நாட்டின் உறுப்புகள். பிணி இன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம்அணி என்ப, நாட்டிற்கு-இவ் ஐந்து. 733 நோய் அணுகாமல் இருத்தல், செல்வச் சிறப்பு, வளமான விளைபொருள், இன்ப வாழ்வு, உறுதியான பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டுக்கு அழகு என்று கூறுவார்கள். நாடு என்ப, நாடா வளத்தன; நாடு அல்ல, நாட, வளம் தரும் நாடு. 739 நாடு என்று சொல்லப்படுவது, தேவையான பொருள்களுக்கும் மற்ற நாடுகளை நம்பிக் கொண்டிருக்காமல், தன்னிறைவு பெற்று இருப்பதே சிறந்த நாடு. முயற்சி செய்து தேடி, பொருளைப் பெறும் நாடு சிறப்பான நாடு அல்ல. ஆங்கு அமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றேவேந்து அமைவு இல்லாத நாடு. 740 நாட்டுக்கு நல்ல அரசன் அமையாவிட்டால், மேலே கூறப்பட்ட நன்மைகள் எல்லாம் நிறைந்து இருந்த போதிலும், அதனால் பயன் இல்லை.

155