பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

75.அரண்

(நாட்டுக்குப் பாதுகாப்பு) ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற் போற்றுபவர்க்கும் பொருள். - 74.1 படையெத்துப் போர் தொடுக்க வருகிறவர்களுக்குக் கோட்டை சிறந்தது. அதே போல், படையெடுப்புக்குப் பயந்து, பாதுகாப்புத் தேடி அடைய விரும்புகின்றவர் களுக்கும் கோட்டை சிறந்தது. மணி நீரும், மண்ணும், மலையும், அணி நிழற் காடும், உடையது-அரண். 742 தெளிந்த அகழி நீரும், விரிந்த நிலப்பரப்பும், உயர்ந்த மலையும், நிழல் தரும் அழகான காடும் சூழ்ந்து இருப்பதே பாதுகாப்பான கோட்டை. “உயர்வு, அகலம், திண்மை, அருமை, இந் நான்கின் அமைவு அரண் என்று உரைக்கும் நூல். 743 உயரம், அகலம், உறுதி, பகைவர் நெருங்க முடியாத இடம் இந்த நான்கும் அமைந்து இருப்பதே கோட்டை என்று அரசியல் நூல் வல்லவர்கள் கூறுவார்கள். சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி, உறு பகை ஊக்கம் அழிப்பது-அரண். 744 சிறிய பாதுகாப்பைத் தருவதாயினும், பெரிய நிலப்பரப்பு உள்ளதாய், பகைவரின் வீரத்தை அழிக்கக் கூடியதாய் இருப்பது கோட்டை.

கொளற்கு அரிதாய், கொண்ட கூழ்த்து ஆகி, அகத்தார் நிலைக்கு எளிது ஆம் நீரது-அரண். 745 பகைவரால் கைப்பற்ற முடியாததாய், போர்க் காலத்தில் உள்ளே இருப்பவர்க்கு உணவு நிறைந்து இருப்பதாய் நிலையாகத் தங்குவதற்கு எளிதான தன்மை உடையது கோட்டை. 156