பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையியல் அதிகாரம் 78

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும், தன் நாளை எடுத்து. 776 சிறந்த போர் வீரன், தன் முகத்திலும் மார்பிலும் காயம் படாத நாட்கள் எல்லாம், வீணாகக் கழித்த நாட்கள் என்று எண்ணுவான் (போரிட்டு காயம்படுவது வீரனின் லட்சியம்).

சுழலும் இசை வேண்டி, வேண்டா உயிரார் கழல் யாப்புக் காரிகை நீர்த்து. 777 சரித்திர புகழை விரும்பி, உயிர் வாழ்வதைக் கருதாத போர் வீரர், தம் கால்களில் வீரச் சலங்ககையைக் கட்டிக் கொள்ளுவதே சிறப்பான செயல். உறின், உயிர், அஞ்சா மறவர், இறைவன் செறினும், சீர் குன்றல் இலர். 778 போர் வந்ததும், உயிரைப் பெரிதாகக் கருதாது அஞ்சாமல் போரிடும் வீரர், அரசன் கோபித்தாலும்கூட தம்முடைய கடமையில் தவறமாட்டார். இழைத்தது இகவாமைச் சாவாரை, யாரே, பிழைத்தது ஒறுக்கிற்பவர்? 779 தான் கூறிய சபதப்படி போர் செய்து, உயிரை இழக்கத் துணிந்த போர் வீரரைத் தவறு செய்ததாகக் கூறி அவரைத் தண்டிக்கத் கூடியவர் யார்? (படையில் சேரும்போது உயிரையும் கொடுப்பேன் என்ற எடுத்துக் கொள்ளும் சபதம்). புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின், சாக்காடு இரந்து கோள்-தக்கது உடைத்து. 780 நாட்டையும், தன்னையும் ஆதரித்த அரசன் கண்கலங்கும்படி ஒரு வீரன் சாகப் பெற்றால், அப்படிப்பட்ட சாவைக் கெஞ்சி பெற்றுக் கொள்ளும் பெருமை உடையது.

463