பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

79. நட்பு

(நட்பின் சிறப்பு) செயற்கு அரிய யா உள, நட்பின்?-அதுபோல் வினைக்கு அரிய யா உள, காப்பு? 781 நட்பைப்போல் தேடிச் செய்து கொள்ளக்கூடிய சிறப்பு மிகுந்தது வேறு என்ன இருக்கின்றது? அதைப்போல, செய்கின்ற காரியத்துக்குச் சிறப்பான பாதுகாப்பு, வேறு என்ன இருக்கின்றது?

நிறை நீர, நீரவர் கேண்மை, பிறை; மதிப் பின் நீர, பேதையார் நட்பு. 782 நல்லவருடைய (அறிவாளி) நட்பு பிறைச் சந்திரனைப் போல நாள் தோறும் வளரும். மூடருடைய நட்பு, முழுநிலவு தேய்வது போல், நாளுக்கு நாள் குறைந்து போகும். நவில்தொறும் நூல் நயம் போலும்-பயில்தொறும், பண்பு உடையாளர் தொடர்பு. 783 நயமான ஒரு நூலைப் படிக்கப் படிக்க, அதன் சிறப்பு அதிகமாகத் தெரிவது போல், நல்ல குணம் உள்ளவருடைய நட்டானது பழகப் பழக இன்பம் தரும்

நகுதற்பொருட்டு அன்று, நட்டல்; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு. 784 ஒருவரோடு ஒருவர் நட்புக் கொள்வது சிரித்துப் பேசி மகிழ்வதற்காக மட்டும் அல்ல. ஒருவர் தவறாக நடந்தால், அதை எடுத்துக் கூறி, தடுத்துக் கண்டிப்பதே சிறந்த நட்பு. புணர்ச்சி, பழகுதல், வேண்டா; உணர்ச்சிதான் நட்பு ஆம் கிழமை தரும். 785 நட்புக் கொள்வதற்குப் பலமுறை கண்டு பேச வேண்டியது இல்லை . ஒத்த உணர்ச்சி இருந்தால், நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைத் தரும். 164