பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் அதிகாரம் 5

அறத்து ஆற்றின் இல்வாழ்கை ஆற்றின், புறத்து ஆற்றில் 6

போஒய்ப் பெறுவது எவன்? தருமத்தின் முறையோடு குடும்ப வாழ்க்கை நடத்துபவன் ஆனால், அவன் வேறு முறையில் சென்று, பெற வேண்டியது என்ன இருக்கிறது?

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. 47 அறத்தின் இயல்போடு குடும்ப வாழ்க்கை வாழ்கின்றவன், மற்ற முயற்சி செய்கிற எல்லோரையும் விட மேன்மையானவன்.

ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. 48 தருமத்தோடு குடும்ப வாழ்க்கை நடத்தி, மற்றவரையும் நல்ல வழியில் செலுத்துபவன் வாழ்வு, தவத்தை விடச் சிறந்தது.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன் பழிப்பது இல்ஆயின் நன்று. 49 தருமம் என்று உயர்வாகக் கூறுவது, குடும்ப வாழ்க்கையே. அதுவும், மற்றவன் பழிக்காமல் இருந்தால், நன்மை ஆகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். 50 உலகில், வாழும் முறைப்படி வாழ்கின்றவன், வானத்தில் உள்ள தெய்வத்தில் ஒருவனாகக் கருதி மதிக்கப்படுவான்.

17