பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம்

6. வாழ்க்கைத் துணைநலம்

(நல்ல மனைவி) மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை. 5t குடும்பத்துக்குப் பெருமை ஏற்பட, கணவனுடைய வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை நடத்துகின்றவள் நல்ல மனைவி ஆவாள்.

மனை மாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும், இல். 52 மனைவியிடம், பெருமை தரக்கூடிய நல்ல பண்பு இல்லையானால், வேறு எவ்வளவு சிறப்பு இருந்தாலும், அதனால் நன்மை இல்லை.

இல்லது என் இல்லவள் மாண்புஆனால்? உள்ளது என், இல்லவள் இானாக்கடை? 53 ஒழுக்கமும், நல்ல குணமும் மனைவியிடம் இருந்தால், அந்த வீட்டில் ஒரு குறையும் இல்லை. அப்படி இல்லாவிடில் பயன் இல்லை.

பெண்ணின் பெருந்தக்க யா உள-கற்பு என்னும் திண்மை உண்டாகப்பெறின்? 54 ஒருவன் பெறுகின்ற செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம், ஒழுக்கமும், மன உறுதியும் உடைய மனைவியை விட, வேறு என்ன இருக்கிறது?

தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள், “பெய் என, பெய்யும், மழை. 55 தெய்வத்தை வனங்காவிட்டாலும் கணவனைப் போற்றி வணங்குகிறவள், கோடை காலத்தில் பெய்யும்

மழையைப் போன்றவள்.

18