பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் அதிகாரம் 6

தற்காத்து, தற் கொண்டாற் பேணி, தகை சான்ற சொற்காத்து, சோர்வு இலாள்-பெண். 56 ஒழுக்கத்தில் தன்னையும் தன் கணவனையும் காத்து, தகுதியான பெருமையையும் போற்றி, உறுதியோடு வாழ்கின்றவளே பெண்.

சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை. 57 பெண்கள், உறுதியால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதே சிறப்பான பாதுகாப்பு. வேறு காவல் முறையால் எவ்விதப் பயனும் இல்லை.

பெற்றாற் பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. 5& கணவனை மதித்துத் தன் கடமையைச் செய்தால், மனைவி சிறப்பு மிக்க மேலான உலக வாழ்வைப் பெறுவாள்.

புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை-இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. 59 மனைவி ஒழுக்கம் இல்லாதவளாக இருந்தால், இகழ்ந்து பேசும் பகைவரின் முன்னே கணவன் சிங்கம் போல் கம்பீரமாகச் செல்ல இயலாது.

‘மங்கலம்’ என்ப, மனைமாட்சி; மற்று அதன் நன்கலம் நன் மக்கட் பேறு. 60 மனைவியின் நல்ல பண்பே வாழ்க்கைக்கு நன்மை தரும். நல்ல மக்களைப் பெறுவதே அணிகலம் என்று கூறுவர்.