பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியியல் அதிகாரம் 101

ஏதம், பெருஞ் செல்வம்-தான் துவ்வான், தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான். f{}{}6 தானும் அனுபவிக்க மாட்டான், தகுதி உடையவருக்கு அவர் வேண்டிய ஒன்றைக் கொடுக்கும் தன்மை இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடம் இருக்கும் பெரும் செல்வத்துக்கு ஒரு நோய் போன்றவன். அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம்-மிகு நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று. 1037 வறுமையில் வாடுகிறவருக்கு ஒன்றும் கொடுத்து உதவி செய்யாதவனுடைய செல்வமானது மிக அழகு வாய்ந்த ஒரு பெண் கணவன் இல்லாமல் தனயே வாழ்ந்து, கிழவியானதைப் போன்றது.

நச்சப்படாதவன் செல்வம்-நடுவூருள் - நச்சு மரம் பழுத்தற்று. . f{}0& மற்றவருக்கு உதவாத காரணத்தால், எவராலும் விரும்பப் படாதவனுடைய செல்வமானது ஊரின் மத்தியில் நச்சு மரம் பழுத்திருப்பது போன்றது (விஷம் உள்ள மரம்) அன்பு ஒரீஇ, தற் செற்று, அறம் நோக்காது, ஈட்டிய ஒண் பொருள் கொள்வார், பிறர். f009 சுற்றத்தாரிடம் அன்பு காட்டுவதையும்விட்டு, தன்னையும் துன்புறுத்தி, நல்ல காரியங்களையும் செய்யாமல் சேர்த்து வைத்த பெரும் செல்வத்தைப் பிறர் கொண்டு போய் அனுபவிப்பர். சீருடைச் செல்வர் சிறு துனி-மாரி வறம் கூர்ந்தனையது உடைத்து. f{}10 பிறருக்கு உதவும் சிறப்புமிக்க செல்வந்தருக்கு ஏற்பட்ட சிறிய வறுமையானது, உலகத்தைக் காக்கக்கூடிய மேகம், வறுமை அடைந்ததைப் போன்றது.

2C9