பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை - பொருள்

.

102. நாண் உடைமை

(இழிவான செயலுக்கு வெட்கப்படுவது) கருமத்தான் நாணுதல், நாணு; திருதுதல் நல்லவர் நானு, பிற. 1011 செய்யத்தகாத காரியத்தைச் செய்ததற்கு வெட்கப்படுவதே உண்மையான வெட்கம். பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு விதமானவை. ஊண், உடை, எச்சம், உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல; நாண் உடைமை மாந்தர் சிறப்பு. 1012 உணவு, உடை பிற எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை. ஆனால் பழிக்கு இடம் தராத மனிதர்களுக்குச் சிறப்பு அளிப்பது வெட்கம் ஒன்றே. ஊனைக் குறித்த, உயிர் எல்லாம்; நாண் என்னும் நன்மை குறித்தது, சால்பு. 1013 உயிர்கள் எல்லாம் உடம்பை ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றன. சால்பு என்பது நாணம் என்னும் நல்ல தன்மையை ஆதாரமாகக் கொண்டது. அணி அன்றோ, நாண் உடைமை சான்றோர்க்கு! அஃது இன்றேல் பிணி அன்றோ, பீடு நடை! 1014 வெட்கத்தைப் பெற்றிருப்பது சான்றோருக்கு ஆபரணம் போன்றது அல்லவா? அந்த ஆபரணம் இல்லையானால், நல்ல குணங்கள் உடையவராக இருந்தாலும் அவருடைய பெருமிதம் சமுதாயத்துக்கு நோய் அல்லவா? ‘பிறர் பழியும் தம் பழியும் நானுவார் நானுக்கு உறைபதி என்னும், உலகு. 1015 தம்மோடு பழகிய ஒருவருக்கு வரும் பழியையும், தமக்கு ஏற்படும் பழியையும் கண்டு வெட்கப்படுகின்றவர், நாணத்துக்கு உறைவிடம் என உலகத்தார் சொல்லுவார்.

21 G