பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் அதிகாரம் 110

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின் செம்பாகம் அன்று; பெரிது. f{}92 கண்களின் இமைகளைச் சுருக்கிக்கொண்டு, கவர்ந்து கொள்ளும் அந்தச் சிறு பார்வையானது எப்படி இருக்கிறது என்றால், அது இன்ப லீலையில் பாதி அளவு அல்ல; பெரும்பகுதியே அந்தப் பார்வையில் தான் உள்ளது.

நோக்கினாள், நோக்கி இறைஞ்சினாள்; அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர். 109.3 அவள் என்னைப் பார்த்தாள், நான் அவளைப் பார்த்தேன்; அப்போது அவள் வெட்கத்தால் தலை குனிந்து கொண்டாள். அவள் அப்படிச் செய்தது சம்மதம் என்ற அன்புப் பயிருக்கு நீர் பாய்ச்சியது போல இருந்தது. யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால், தான் நோக்கி, மெல்ல நகும். 1094 அவளை நான் பார்க்கும்போது, அவள் நாணத்தால் தலையைக் குனிந்துகொண்டு, தரையைப் பார்க்கின்றாள். நான் அவளைப் பார்க்காமல் இருக்கும்போது, அவள் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்கின்றாள். குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒரு கண் சிறக்கணித்தாள் போல தகும். f{}95 என்னை குறிப்பாக நேராகப் பார்க்காமல், வேறு எங்கோ பார்ப்பது போல் கடைக்கண்ணால் என்னைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொள்வாள்.

உறாஅதவர்போல் சொலினும், செறாஅர் சொல்

ஒல்லை உணரப்படும். f{}96 முன்பின் அறியாத அயலாள்போல், விருப்பம் இல்லாத சொற்களைக் கூறினாலும், வெறுப்பு இல்லாத அந்தச் சொற்களிலிருந்து அவளுடைய விருப்பத்தை அறிந்து

கொள் ம்.

காளள முடியும 227