பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம்

செறாஅச் சிறு சொல்லும், செற்றார்போல் நோக்கும், உறாஅர் போன்று உற்றார் குறிப்பு. 1097 பிறர் முன்னிலையிலும், வெளிப்படையாகவும், விருப்பம் இல்லாதவர்போல் பார்ப்பதும், பேசுவதும் அயலார் போல் நடந்து கொள்வதும், உள்ளத்தால் காதல் உடையோர் செயலாகும்.

அசையியற்கு உண்டு, ஆண்டு ஒர் ஏஎர்; யான் நோக்க பசையினள், பைய நகும். 1093 அவளை நான் பார்க்கும்போது, என்னிடம் கொண்ட அன்பினால், அவளும் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரிக்கின்றாள் அந்தச் சிரிப்பில் உண்டாகின்ற சிறு அசைவிலும் கூட ஒரு கவர்ச்சியான அழகு இருப்பதைக் காண்கிறேன்.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்னே உள. 1099 பிறர் முன்னிலையில், ஒருவரை ஒருவர் அறியாத அயலார் போல், சாதுர்யமாக நடந்து கொள்ளுகிற கெட்டிக்காரத்தனமானது, உண்மையான காதலர்களிடம் இருக்கக்கூடியதே!

கண்னொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. 1100 அன்பினாலும், ஆசையினாலும் கண்ணோடு கண் பொருந்திப் பார்க்கின்ற பார்வை, சம்மதித்துப் போன பின், வாய்ப்பேச்சுக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது? அதனால் ஒரு பயனும் இல்லையே!

228